
* உழைப்பு, உடலைப் பலப்படுத்தும்; கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும்.
- பிளமிங்
* பத்து விரல்களும் பதறாது உழைத்தால், அஞ்சு விரலால் அஞ்சாது தின்னலாம்.
- டாலிராண்ட்
* அளவற்ற உழைப்பைத்தான் மேன்மை என்கிறோம்.
- லாங்பெல்லோ
* கடுமையான உழைப்பைத் தவிர, வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை.
- டர்னர்
* ஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால், உழைப்பு என்ற மருந்தைக் கொடு.
- எமர்சன்
* உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது.
- ராபர்ட் சப்ரிசா
* உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்காது. - ஜேம்ஸ் ஆலன்
* கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்குச் சமம்.
- லால் பகதூர் சாஸ்திரி
* சோம்பல், தீய பழக்கம், வறுமை ஆகிய மூன்று தீமைகளை உழைப்பு களைகிறது.
- வால்டேர்
* அடிமையைப்போல உழைப்பவன், அரசனைப்போல உண்பான்.
- கதே
* உழைப்பு வறுமையை மட்டுமல்லாமல், தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்
* செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு; உலகத்தை இயக்குவதும் அதுவே.
- வெப்ஸ்டர்.
தொகுப்பு: மரிய ஆன்டோலினா,
சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.