

அம்மா மகனுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தாள். அவள் மகனிடம், "மகனே!...திடீரென்று எனக்கு கண் பார்வை போய்விட்டால் என்ன செய்வாய்? சொல் பார்க்கலாம்'' என்றாள்.
"ஏம்மா அப்படிச் சொல்றே?....உனக்கு அந்த மாதிரியெல்லாம் ஆகாது...''
"ஒருவேளை கண் பார்வை மங்கிவிட்டால்?''
"நல்ல ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பேன் அம்மா!''
"அங்கே எனக்கு கண் பார்வை சரியாக மீட்க முடியாவிட்டால்?''
"உலகத்திலேயே நல்ல கண் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று காண்பிப்பேன்''
"சரி..., சரி..., அந்த சிகிச்சையும் பலனளிக்காவிட்டால்?
" நான் உங்களை கண்ணும் கருத்துமாய் கவனித்து காப்பாற்றுவேன் அம்மா!''
"சரிம்மா....,இதெல்லாம் என்கிட்டே கேக்கிறியே.....,எனக்கு கண் பார்வை இல்லாமல் போனா நீ என்ன செய்வேம்மா?...''
"என் கண்களை உடனே உனக்குத் தருவேன் மகனே!''
-எம். பார்த்தசாரதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.