

* உழைப்பு மூன்று தீமைகளைக் களைகிறது.
பொழுது போகாமை....,
கெட்ட பழக்கம்...., வறுமை!
- வால்டேர்
* கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்குச் சமம்.
- லால் பகதூர் சாஸ்திரி
* உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்காது.
- ஜேம்ஸ் ஆலன்
* அடிமையைப் போல் உழைப்பவன் அரசனைப் போல் உண்பான்.
- கதே
* எண்ணங்கள் அனைத்தும் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். இதன் மூலம் சாதனைகள் படைக்க முடியும்.
- அப்துல் கலாம்.
* அடுத்தவர் பணத்தில் நெய்ச்சோறு உண்பதைக் காட்டிலும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் உண்ணும் தண்ணீரும் சோறும் சிறந்தது. அப்படி உண்பதில்
மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
- வாரியார் சுவாமிகள்.
* உழைக்க வேண்டுமென்பது சம்பாதித்து வயிற்றை நிரப்ப வேண்டும் என்பதற்கல்ல..., உரிய பெருமையுடன் வாழ்வதற்காகவே!
- ப்ரெளனிங்.
• உழைப்பு உடலைப் பலப்படுத்தும். கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும்.
- ப்ளெமிங்
• எப்போதும் பாடுபடு. துன்பம் போன்ற எல்லா பேய்களும் உழைப்பைக் கண்டால் ஓடி ஒளிந்து விடும்.
-மகாகவி பாரதியார்.
பி.சுப்ரமணியன், குரோம்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.