

1. ஒற்றைக்கால் மனிதனுக்கு எட்டுக் கை...
2. இவன் சுற்றினால் நமக்கு சுகம்...
3. சுற்றியிருக்கும் உடையோ கந்தால், உள்ளிருக்கும் பிள்ளைகளோ மணிகள்...
4. கறுப்புக் காகம் ஓடிப் போச்சு... வெள்ளைக் காகம் நிக்குது...
5. ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல... சூடு கொடுக்கும் தீயும் அல்ல... பளபளக்கும் தங்கமும் அல்ல...
6. பச்சைக்கிளிப் பெண்ணுக்கு உடம்பெல்லாம் முள்ளாம்...
7. பிறை போல இருக்கும் அண்ணன், பயிர்பச்சை அறுத்திட உதவுவான்...
8. கல் எறிந்தால் போதும் அரண்மனையே காலியாகி விடும்...
9. மரக்கிளையில் தறியோட்டும் சின்னப் பொண்ணு...
விடைகள்:
1. குடை
2. மின்விசிறி
3. சோளக்கதிர்
4. கறுப்பு உளுந்து
5. சூரியன்
6. கள்ளிச் செடி
7. அரிவாள்
8. தேன்கூடு
9. தூக்கணாங்குருவி
}ரொசிட்டா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.