பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பலே ராமு!

ராமு, சோமு, தாமு மூவரும் நண்பர்கள்! ஒருநாள் கடலில் மூவரும் படகில் சென்று கொண்டிருந்தனர். படகு கடல் நடுவில் போய்க்கொண்டிருந்தது!

News image
Updated On :19 ஜனவரி 2018, 6:30 pm

சஜி பிரபு மாறச்சன்

ராமு, சோமு, தாமு மூவரும் நண்பர்கள்! ஒருநாள் கடலில் மூவரும் படகில் சென்று கொண்டிருந்தனர். படகு கடல் நடுவில் போய்க்கொண்டிருந்தது! அப்போது!.....ஒரு பெரிய பூதம் தோன்றியது! அனைவரும் நடுங்கிவிட்டனர். பூதம் அவர்களைப் பார்த்து, ""உங்க மூணு பேரையும் நான் சாப்பிடப் போகிறேன்'' என்றது.

மூவரும் ""வேணாம் எங்களை ஒண்ணும் செஞ்சிடாதே'' என்றார்கள்!

""அப்படீன்னா சரி, நான் உங்களுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறேன்....உங்களில் ஒருத்தனாவது புத்திசாலியா இருந்தா எல்லாருக்கும் உயிர்ப்பிச்சை கொடுப்பேன்'' 
""என்ன நிபந்தனை?''

""நீங்க மூன்று பேரும் ஆளுக்கு ஒரு முக்கியமான பொருளை இந்தக் கடலில் தூக்கி எறிய வேண்டும். நீருக்கு அடியில் எங்கே இருந்தாலும் சரி, அதை நான் எடுத்து வந்துவிடுவேன்... நல்லாக் கேட்டுக்குங்க..,ஆளுக்கு ஒரு பொருள்! மூன்றையும் நான் எடுத்து வந்து விடுவேன்! அப்படி நான் எடுத்து வந்துவிட்டால் நீங்கள் தோற்றதாக அர்த்தம்!...நான் உங்களை சாப்பிட்டு விடுவேன்!....அப்படி நான் ஏதாவது ஒரு பொருளை எடுத்து வர முடியாவிட்டால்கூட நீங்க ஜெயிச்சுட்டதா அர்த்தம்! நான் உங்களை விட்டு விடுவேன்'' 

""வேறே வழியே இல்லியா?'' 

பூதம், ""ம்ஹூம்...வேறே வழியே இல்லை...ம் சீக்கிரம் தூக்கிப் போடுங்க''என்றது.
சோமு தன்கையிலிருந்த மோதிரத்தைத் தூக்கி எறிந்தான். பூதம் உடனே கடலில் குதித்து அதை எடுத்து வந்துவிட்டது! 

தாமு தான் கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலியைத் தூக்கிக் கடலில் வீசினான். பூதத்திடம் பாச்சா பலிக்கவில்லை! ‘தொபுக்கட்டீர்' என்று குதித்து தங்கச் சங்கிலியை எடுத்து வந்து விட்டது!

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பூதம் ராமுவைப் பார்த்து அலட்சியமாக, ""ம்...இப்ப உன் முறை ஆகட்டும்!'' என்றது!

ராமூ "டக்' தன்னிடமிருந்த தண்ணீர் குப்பியிலிருந்து தண்ணீரைக் கொட்டிவிட்டான்! பூதத்தைப் பார்த்து, ""நான் கொட்டிய இந்த நல்ல தண்ணீரைக் கொண்டு வா! பார்க்கலாம்!'' என்றான். 

பூதம் திகைத்து விட்டது! தோல்வியை ஒப்புக்கொண்டு ஓட்டம் பிடித்தது!
சோமுவும், தாமுவும் ""பலே ராமு'' ன்னு அவனைப் பாராட்டினாங்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.