

பூக்களோடு பேசிப் பழகு
பெரிய நன்மை கிடைக்கும்! -அதன்
பூஞ்சிரிப்பில் திளைத்துவிட்டால்
இந்த உலகம் மறக்கும்!
மல்லிகை போல் சிரிப்பதுவே
மனதிற்கு அழகு தம்பி !
மறக்க வொண்ணா ரோஜாமுகம்
முகத்துக்குத் தெளிவு!
தாமரைபோல் மலர்ந்த முகம்
தங்கமுகம் என்பார்! - அன்பு
வார்த்தையாலே தாழம்பூவின்
வாசத்தையே காண்பார்!
முல்லைமலர் நறுமணத்தில்
மூச்சுக்குத்தான் குளிர்ச்சி! - நீ
அல்லியைப் போல் முகம் சிவப்பாய்
அநியாயத்தைக் கண்டால்!
வாடாமல்லி பூவைப்போல் நீ
வாடமலே வாழ்வாய்!
மருக்கொழுந்து போலே நீ
மணக்கக் கற்றுக் கொள்வாய்!
அரளிப் பூ மாலைதனில்
அம்மன் அழகாய் சிரிப்பாள்!
மகிழம் பூ சிறிதென்றாலும்
மகிழும் அதன் மணத்தில்!
மனிதம் பூத்த முகத்தில்
கள்ளம், கபடம் என்பதேது?
பூவில்லாமல் மனித வாழ்வில்
பூக்கும் நிகழ்ச்சி ஏது?
பூக்கள் போல பிறர்க்கு (உ)தவி
பெரிய புகழைத் தேடு!
பூப்போல மனம் படைத்தால்
பூமியில் நீ முதலில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.