பொன்மொழிகள்!

பல மொழிகளைக் கற்பதில் பெருமை இல்லை. ஒரு மொழியிலாவது புலமை பெற வேண்டும். 
பொன்மொழிகள்!
Updated on
1 min read

* பல மொழிகளைக் கற்பதில் பெருமை இல்லை. ஒரு மொழியிலாவது புலமை பெற வேண்டும். 
- சப்பர்ஜியன்
* மொழியை வைத்துத்தான் நாட்டின் தொன்மையைக் கண்டுபிடிக்க முடியும்! 
- ஸ்பில் சன்
* மொழி என்பது ஒரு வைரம். பட்டை போடப்போட அதனிடமிருந்து கோடிக்கணக்கான கதிர்கள் புறப்படும். 
- டிரஞ்ச்
* கவிதைகளின் சுவை உணர அந்தக் கவிதை எழுதப்பட்ட மொழியிலேயே படிக்க வேண்டும். இது கவிதையின் பெருமை! அது மட்டுமல்ல! மொழியின் தனிச் சிறப்பையும் குறிக்கிறது! 
- ஜான்சன்
* இலட்சியங்களில்லாத மொழி ஒரு மொழியே இல்லை. 
- டைர்ஸ்
* மொழி என்பது கருத்தைச் சுமக்கும் அழகிய வாகனம்! சிந்திக்க உதவும் சிறந்த சாதனமும் கூட! 
- சர்.எச்.டேவி
* மொழி ஓர் இனம் எப்படிப்பட்ட இனம் என்பதைக் காட்டுகிறது! 
- பென்.ஜான்சன்.
* யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்......
- பாரதியார்
* ஒரு மொழி சிறந்து விளங்க வேண்டுமானால் அந்த மொழியைப் பேசுகிற மக்கள் செல்வாக்கோடும் சிறப்போடும் உயர்ந்து விளங்க வேண்டும் 
- மு.வரதராசனார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com