தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மன்பதை அமைதி!

அரிவாள் கத்தி துப்பாக்கிஅகிலம் அழிக்கும் அணுகுண்டுஎரியைக் கக்கும் பீரங்கி

News image
Updated On :17 செப்டம்பர் 2018, 8:40 am

கே.பி.பத்மநாபன்

அரிவாள் கத்தி துப்பாக்கி
அகிலம் அழிக்கும் அணுகுண்டு
எரியைக் கக்கும் பீரங்கி
இன்னும் பலவாய் ஆயுதங்கள்

கரியாய் இந்த ஞாலத்தைக் 
கணத்துள் அழிக்கும் என்றறிந்தும் 
பெரிதாய் இதனைப் போற்றுதலும் 
பெருமைக்குரிய செயலாமோ?

வாதம் தன்னில் கடுஞ்சொல்லும் 
வளர்த்தும் நாட்டில் வன்முறையை 
சேதம் செய்யும் ஆயுதமாய்ச் 
சில தீச்சொற்கள் ஆகிடுமே!

பூதமாகும் பொய்யுரையும்
புவியை அழிக்கும் ஆயுதமாம்
பேதம் சொல்லில் வந்துவிட்டால்
பேராபத்தின் ஆயுதம்தான்!

அன்பு, கருணை, அகிம்சைதான் 
அகிலம் காக்கும் ஆயுதங்கள்!
துன்பம் செய்ய எண்ணாத 
தூய மனித நேயம்தான் 

இன்பம் நிறைந்த அமைதியினை
என்றும் உலகில் நிலைப்படுத்தும்!
மன்பதையின் அமைதிக்காய்
மாய்ப்போம் போரின் ஆயுதங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.