அகில்குட்டியின் டைரி!: ரெயின் கோட்!

திங்கட் கிழமை!.... அன்னைக்கு ஸ்கூல் யூனிஃபார்ம் ஒயிட் அண்டு ஒயிட்! காலையில் ஸ்கூலுக்குப் போகும்போது மழை வருவது போல் இருந்தது. வானம் மூடி இருந்தது.
அகில்குட்டியின் டைரி!: ரெயின் கோட்!


திங்கட் கிழமை!.... அன்னைக்கு ஸ்கூல் யூனிஃபார்ம் ஒயிட் அண்டு ஒயிட்! காலையில் ஸ்கூலுக்குப் போகும்போது மழை வருவது போல் இருந்தது. வானம் மூடி இருந்தது. எட்டோமுக்காலுக்கு ஸ்கூல்லே இருக்கணும். நானும், ரகுவும் எட்டேகாலுக்கே ரெடியாயிட்டோம். அம்மா எங்க ரெண்டு பேருக்கும் ரெயின் கோட்டைக் கொடுத்துப் போட்டுக்கச் சொன்னாங்க...... ரகு போட்டுக்கிட்டான்! நான் ரெயின் கோட்டை வாங்கிக்கிட்டேன்!.... ஆனா போட்டுக்கலை.... 

""மழைக் கோட்டைப் போட்டுக்கோ!'' ன்னாங்க அம்மா.

""இப்பதான் மழை வரலியே,.... வந்தா போட்டுக்கறேன்!... '' அப்படீன்னேன் நான். 

மழை இதுவரைக்கும் வரலே.... வந்தா எங்கேயாவது நின்னு போட்டுக்கலாம்னு ரெயின் கோட் இருந்த பையை வாங்கிக்கிட்டேன். ஸ்கூல் பக்கத்திலேதான். பத்து நிமிஷத்திலே நடந்துடலாம். ரெண்டு  பேரும் கிளம்பினோம். ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் எல்லாத்தையும் எடுத்துக் கிட்டோம். நான் ரெயின் கோட் இருந்த பேக்கையும் எடுத்துக்கிட்டேன். 

ஒரு தெரு தள்ளி இருக்கிற பாலத்து மேலே நடந்துக்கிட்டு இருந்தோம். பாலம் தாண்டி ரெண்டாவது தெருவிலே ஸ்கூல் இருந்தது.  மழை லேசா தூற ஆரம்பித்தது. ரெண்டு மூணு விநாடிதான் இருக்கும்!.... மழை பெரிசா பிடிச்சுக்கிச்சு!... பாலத்துலே ஒதுங்க இடமே இல்லே.... என்னோட ஒயிட் ட்ரெஸ் எல்லாம் நனைஞ்சுடுச்சு!... பாலம் தாண்டி ஒரு கடை இருந்தது. அதிலே முன்னாலே ஒரு சிமென்ட் ஷீட் போட்டிருப்பாங்க.... நானும், ரகுவும் வேகமா ஓடினோம். எங்களைத் தாண்டி சர்ர்ர்ர்ருனு தண்ணியைப் பீச்சி அடிச்சுக்கிட்டு ஒரு கார் போச்சு!.... அவ்வளவுதான் என்னோட ஒயிட் யூனிஃபார்ம் எல்லாம் ஒரே சகதித் தண்ணி!... எனக்கு அழுகையே வந்துடும் போல் இருந்தது!... 

ம்.... அம்மா சொன்னதைக்  கேட்டிருக்கலாம்!.... ரெயின் கோட்டிலே சகதி இருந்தாக்கூட அதை ஈஸியா கழுவிடலாம். இப்போ என்ன பண்றது?.... 

ரகுவுக்கு என்னைப் பார்க்க பாவமா இருந்தது. ""என்னக்கா, ரொம்ப வருத்தமா இருக்கா?... இப்போ என்ன பண்ணலாம்க்கா?'' என்றான்.

""ஸ்கூலுக்கும் டைம் ஆச்சு.... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே..'' அப்படீன்னேன். கடையை நெருங்கிட்டோம். கடைக்காரர் என்னைப் பார்த்தார். ரகுவுக்கும், எனக்கும் கடைக்காரரை நல்லாத் தெரியும். எங்களைப் பார்த்த கடைக்காரர், 

""என்ன பாப்பா, நனைஞ்சுட்டியா,.... டிரெஸ்ùஸல்லாம் ஒரே சேறா இருக்கு?.... இப்படியே எப்படி ஸ்கூலுக்குப் போவே?.... நான் வேணும்னா அப்பாவுக்குப் போன் செய்யட்டுமா?...'' அப்படீன்னு கேட்டார். 

நான் நம்பர் கொடுத்தேன். அவரும் ஃபோன் செய்தார்.  ஜானகி சித்திதான் ஒரு குடையை  எடுத்துக்கிட்டு வந்தாங்க. ஒரு புது டிரெஸ்ûஸயும் எடுத்துக்கிட்டு வந்தாங்க....கடையிலேயே நான் வெள்ளைக்கலர் சீருடையை மாத்திக்கிட்டேன். 

ஆனா ஸ்கூலுக்கு பத்து நிமிஷம்  லேட் ஆயிடுச்சு!... ஸ்கூல் கேட்டைப் பூட்டிட்டாங்க... பிரேயர் நடந்துக்கிட்டு இருந்தது. 

சித்தி டீச்சர் கிட்டே நடந்ததைச் சொல்லி கிளாஸிலே உட்கார்த்தி வெச்சாங்க... ரகுவும் என்னலேதானே ஸ்கூலுக்கு லேட்டா வர்றான். ச்சே! நான் அம்மா சொன்னதை உடனே கேட்டிருக்கணும்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com