அரங்கம்: பொய்யை மெய்யாக்கும் கருவி!

(மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஜீவனும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவன் சகோதரி சுபாவும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள்.
அரங்கம்: பொய்யை மெய்யாக்கும் கருவி!
Updated on
4 min read


(மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஜீவனும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவன் சகோதரி சுபாவும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். சுபா எல்லோரிடமும் கனிவாகப் பேசுவாள், உண்மையே பேசுவாள். ஆனால், ஜீவன் அவளுக்கு நேர் எதிர். எதற்கெடுத்தாலும் பொய் சொல்வான். அவன் சொன்னது பொய் என்பதைப் பிறர் கண்டுபிடித்தாலும் அதை ஒப்புக்கொள்ள மாட்டான். ஜீவனின் அப்பா அவனைத் திருத்துவதற்கான தகுந்த  நேரத்திற்காகக் காத்திருந்தார். அந்த நேரமும் ஒரு நாள் வந்தது) 

காட்சி -1
இடம் - வீடு
மாந்தர்கள்: அம்மா, அப்பா, சுபா,  ஜீவன்.

ஜீவன்:  (ஞாயிற்றுக்கிழமை) அப்பா இன்னிக்கு எங்களை எங்கேயாவது கூட்டிப் போறீங்களா? 
அப்பா: சையின்ஸ் எக்ஸிபிஷன்  நடக்குதே... அங்கு போகலாமா...?
ஜீவன்:  ஓ... போகலாமே... ஐஸ் கிரீம், சிப்ஸ் எல்லாம் வாங்கித் தரணும்... (அப்போது சுபா அங்கு வந்தாள்)
சுபா: அப்பா என் ஜாமென்ட்ரிபாக்சை எடுத்து வைத்துக்கொண்டு ஜீவன் தரமாட்டேன் என்கிறான். கேட்டால், முன்பே திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்று பொய் சொல்கிறான்.
அப்பா: என்ன ஜீவன் அக்காவிடம் வாங்கிய ஜாமன்ட்ரிபாக்சை திருப்பிக் கொடுக்கலையா?
ஜீவன்: எப்பவோ கொடுத்துட்டேம்பா..... அவளுக்குதான் ஞாபகம் இல்லை..
சுபா: இல்லப்பா... இவன் பொய் சொல்றான். ஸ்கூல்லதான் பொய் சொல்றான்னா.... வீட்டுலேயும் சொல்ல ஆரம்பிச்சுட்டான். எனக்கு நாளைக்கு மேத்ஸ் டெஸ்ட் இருக்குப்பா... தரச்சொல்லுங்க... 
அப்பா: என்ன ஜீவன்... (அவர் மிரட்டுவது போல கேட்டதும்)
ஜீவன்: இல்லப்பா நான் கொடுத்துட்டேன்... (மீண்டும் பொய் சொன்னான்)
சுபா: இல்லவே இல்லப்பா... அவங்கிட்டதான் இருக்கு...எனக்கு நல்லா தெரியும், நேற்று  இவனோட கிளாஸ் டீச்சர் கூட என்னைக் கூப்பிட்டு கம்ப்ளைண்ட் பண்ணார் தெரியுமா? 
அப்பா: என்ன சொன்னார்?
சுபா:  யாரோட நோட் புக்கையோ  வாங்கி வச்சிகிட்டு,  தந்துட்டேன்னு பொய் சொல்லியிருக்கான். இவனிடம் இருந்ததைக் கண்டுபிடிச்சுட்டாங்க... அப்பவும் தான் செஞ்சது தப்புன்னு இவன் ஒத்துக்கலை. கிளாஸ் பசங்க எல்லோரும் இவனை "புளுகு மூட்டை'ன்னே கூப்பிடுறாங்கப்பா... க்ளாஸ் டீச்சர் உங்ககிட்ட சொல்லி கண்டிச்சு வைக்கச் சொன்னார்.
அப்பா: என்ன  ஜீவன் அக்கா சொல்றது உண்மையா?  (அப்பா மிரட்டியதும் ஓ...வென அழத் தொடங்கினான். அவன் கை, கால்கள் நடுங்கின, வாய் குழறியது)
அப்பா: சரி... சரி... அழாதே.... (சுபாவைப் பார்த்து)  உனக்கு புதுசு வாங்கித் தரேன். சீக்கிரமா கிளம்புங்க... கண்காட்சிக்குப் போகலாம்.
(எல்லோரும் கண்காட்சிக்குக் கிளம்பிச் சென்றனர்)

காட்சி -2
இடம் - கண்காட்சி
மாந்தர்கள்: அப்பா, அம்மா, சுபா,  ஜீவன், பேராசிரியர்.


(கண்காட்சியில் அறிவியல் தொடர்பான பல கண்டுபிடிப்புக் கருவிகளைப் பார்த்தும், அதன் செயல்முறைகளைத் தெரிந்து கொண்டும் வந்தபோது, ஓரிடத்தில் பேராசிரியர் ஒருவர் பலருக்கும்  ஒரு கருவியைக் காட்டி அதுபற்றி சொல்லிக் கொண்டிருந்தார். நால்வரும் அங்கு சென்றனர்)
சுபா: (ஆவலுடன்) சார் இது என்ன கருவி? புதுசா இருக்கே...?
பேராசிரியர்: இதுவா... பொய் சொன்னால் கண்டுபிடிக்கும் கருவி.
சுபா: என்னது... பொய் சொன்னால் கண்டு பிடிக்குமா? ஆச்சரியமா இருக்கே...
(ஜீவனைப் பார்த்துக்கொண்டே கேட்டாள். அந்தக் கருவியைப் பற்றித் தெரிந்துகொள்ள  ஜீவனைத் தவிர எல்லோரும் ஆவலுடன் இருந்தனர். அவன் தன் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தான்)
அப்பா: எப்படி சார் இது சாத்தியம்? ஆச்சரியமா இருக்கே... பொய் சொல்வதைக் கூட கண்டுபிடிக்க மிஷின் வந்துடுச்சா? 
பேராசிரியர்: ஆமாம், அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியால் இன்று மனிதன் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கக் கருவிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் இது.
சுபா: இந்தக் கருவி பற்றி எக்ஸ்பிளைன் பண்ணுங்க அங்கிள்!
பேராசிரியர்:  பொய் சொன்னவங்க தன் தவறை ஒப்புக்கொள்ளும் வரை நிம்மதியாகத் தூங்க முடியாது. "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்' என்று சொல்வார்களே... அதுபோல...  அவர்கள் சொன்ன பொய்யே அவர்கள் மனதை அரித்துக் கொன்றுவிடும். ஒரு பொய்யைச் சொல்லத் தொடங்கி அது பல பொய்களைச் சொல்ல வைத்துவிடும்.
அறிவியல் ரீதியாக மனிதனின் மன நிலைக்கும் உடலுக்கும் தொடர்பு இருக்கிறது. மனிதன் உடல் அசைவுகள், அவன் பேசும் விதம்,  முக பாவங்கள் போற்றவை ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப மாறும். மனிதனின் செயல்களுக்கு ஏற்ப அவனது உடலும், நரம்பு மண்டலங்களும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. இதை அடிப்படையாக வைத்துத்தான் ஒருவர் பொய் சொல்கிறாரா?  இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்கும் நரம்பியல் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் கருவி ஒன்று அறிவியல் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் "லை டிடெக்டர்' (கண்ங் ஈங்ற்ங்ஸ்ரீற்ர்ழ்) என்றும், "பாலி கிராபி சிஸ்டம்' (டர்ப்ஹ்ஞ்ழ்ஹல்ட் நஹ்ள்ற்ங்ம்) என்றும் சொல்வார்கள். 
ஜீவன்: அப்படியா?  நிஜமாவே கண்டுபிடிச்சுடுமா?  (ஒருவித பயத்துடன் கேட்டான்) 
பேராசிரியர்: ஆமாம்பா... பொய் சொல்றவங்களைக் காட்டிக் கொடுத்துடும். அவர்களின் உளறல், பிதற்றலில் இருந்து கண்டு பிடிக்கலாம். பொய் சொல்லத் தொடங்கும்போது முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார்கள். அப்போது அவர்கள்  உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
சுபா: நிஜமாவா அங்கிள்?
பேராசிரியர்: ஆமாம்மா, நாம் வருத்தமாகவோ சோகமாகவோ இருந்தால் நம் கால்களில் நடுக்கம் ஏற்படும், நா குழறும், பேச்சு தடுமாறும். ஆனால் நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம் மனமும் உடலும் துள்ளிக் குதிக்கும், புத்துணர்ச்சியாக இருப்போம். இப்படி நம்  உடலில் சில மாற்றம் ஏற்படுவதை நம் உடல் காட்டிக் கொடுத்துவிடுமல்லவா? அது போலத்தான்,  குற்றம் செய்தவன், பொய் சொன்னவன் அதை மூடி மறைக்க நினைத்தாலும், அந்த நிகழ்ச்சியை அவனுக்கு மீண்டும் நினைவுபடுத்தினால், அவனை அறியாமல் அவனது உடலில் ஒருவித நடுக்கம் ஏற்படும். இத்தகைய மாற்றங்களைக் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டதுதான் இந்த "லை டிடெக்டர்' கருவி! 
சுபாவின் அப்பா: எப்படிக் கண்டுபிடிக்கிறது இந்த மிஷின்?
பேராசிரியர்:  மேலே சொன்ன  மாற்றங்களை வரைபடம் (கிராஃப்) மற்றும் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து அதன் மூலம் உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். குற்றவாளிகளிடம் விசாரணை செய்ய இந்தப் புதிய முறையை அமெரிக்காவில் உள்ள "பிரைன் ஃபிங்கர் பிரிண்டிங் லேபரட்டரீஸ்' (ஆழ்ஹண்ய் ஊண்ய்ஞ்ங்ழ் ல்ழ்ண்ய்ற்ண்ய்ஞ் கஹக்ஷர்ழ்ஹற்ர்ழ்ண்ங்ள்) என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.  இதற்கு அவர்கள் "மூளை மின் வரைவி உணரிகள்' (உப்ங்ஸ்ரீற்ழ்ர் ங்ய்ஸ்ரீங்ல்ட்ஹப்ர்ஞ்ழ்ஹல்ட் நங்ய்ள்ர்ழ்ள்) என்ற கருவியைப் பயன்படுத்துகின்றனர்.
குற்றவாளியின் தலையில் மூளை மின்வரைவி உணரிகளைப் பொருத்துவார்கள். பின்பு அவர் மீது கூறப்பட்டுள்ள புகார், குற்றம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகளைக் காண்பித்து கேள்வி கேட்பார்களாம். குறிப்பா,  ஒருவர் வீட்டில் திருடிய பொருள்களை அவரிடம் காட்டும்போது, அவரது மூளையில் (அவர் அதைத் திருடியிருந்தால்) அந்தத் திருட்டு சம்பவம் நினைவுக்கு வந்துவிடுமாம். அப்போது மூளையில் இருந்து வெளிப்படும் மின் குறியீடுகள் (உப்ங்ஸ்ரீற்ழ்ண்ஸ்ரீஹப் நண்ஞ்ய்ஹப்)  மாறுபடுமாம். அவர் திருடவில்லை என்றால் மூளையில் எந்த மாற்றமும் இருக்காதாம். பொய் சொன்னாலும் அப்படித்தான். இதேபோல பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள டேனியல் லால்கில் பென் என்பவர் "காந்த ஒத்ததிர்வு' (ஙஹஞ்ய்ங்ற்ண்ஸ்ரீ தங்ள்ர்ய்ஹய்ஸ்ரீங்) மூலம் மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.
டிரெக்ஸில் பல்கலைக்கழகத்தில் உள்ள மற்றொரு குழுவினர் "அதிநுட்ப பலமுனை வரைவி' (ஏண்ஞ்ட்-பங்ஸ்ரீட் டர்ப்ஹ்ஞ்ழ்ஹல்ட் நஹ்ள்ற்ங்ம்) என்ற தொழில்நுட்பம் மூலம் பொய் சொல்பவர்கள், குற்றம் செய்தவர்களைக் கண்டு பிடிக்க முடியும் என்கிறார்கள். 
சுபாவின் அப்பா: அடடா...  இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் பிரமிக்க வைக்கிறதே... சார்!  
(ஜீவனுக்கு கை, கால்கள் நடுங்கத் தொடங்கியதையும், முகத்தில் வியர்வை அரும்பியதையும் எல்லோரும் பார்க்கத் தவறவில்லை.  பேராசிரியருக்கு நன்றி கூறிவிட்டு எல்லோரும்  வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். ஜீவன் மெளனமாகவே இருந்தான்)

காட்சி - 3
இடம் - வீடு
மாந்தர்கள்:  அப்பா, ஜீவன், அம்மா, சுபா.

(இரவு ஜீவன் தூக்கம் வராமல் புறண்டு புறண்டு படுத்தான். அப்பா தூங்காமல் இருப்பதை அறிந்து அவர் அறைக்குள் சென்று அப்பாவின் அருகில்  அமர்ந்தான்)
அப்பா: என்ன ஜீவன் நீ தூங்கலையா...? 
ஜீவன்: தூக்கம் வரலை டாடி... ஐ ஆம் ஸாரி...
அப்பா: எதுக்கு இப்போ சாரி...? போய் தூங்கு... ரொம்ப நேரமாச்சு.
ஜீவன்: உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன், சாரி டாடி...  அக்காவோட ஜாமென்ட்ரிபாக்ஸ் எங்கிட்டதான் இருக்கு... ஸ்கூல்ல கூட என் ஃபிரண்டோட நோட்டை நான்தான் வாங்கிட்டுத் திருப்பிக் கொடுத்துட்டேன்னு பொய் சொன்னேன்... இனிமே பொய்யே சொல்லமாட்டேன் டாடி.... சாரி... அழ ஆரம்பித்தான்!  
அப்பா: இட்ஸ் ஓகே... கண்ணா... பொய் சொல்றது எவ்வளவு பெரிய பேட் ஹாபிட்னு நீ புரிஞ்சுக்கிட்டதே எனக்குப் போதும்...  போய் நிம்மதியாக தூங்கு...
(இதை சுபாவும் அம்மாவும் அறைக்கு வெளியில் இருந்து கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர். பிள்ளைகள் இருவரும் தூங்கிய பிறகு கணவன்-மனைவி இருவரும் பேசிக்கொண்டனர்)
கணவன்:  மகன் வரவர ரொம்ப பொய் சொல்லத் தொடங்கியிருக்கிறான் என்று மகனைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தாயே... இன்று உனக்கு சந்தோஷம்தானே...?
மனைவி:  ரொம்ப நிம்மதியா இருக்குங்க... இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு அவனைக் கூட்டிகிட்டுப் போய்.... அவனுக்கு அதன் மூலமே புரிய வச்சுட்டீங்க... இனிமே நம்ம புள்ளையைப் பற்றிய கவலையே எனக்கு இல்லைங்க... 
(ஜீவன் தன் அலமாரியில் இருந்த சுபாவின் ஜாமென்ட்ரிபாக்சை எடுத்து அவளிடம் தந்துவிட்டுப் படுத்துக் கொண்டான்)

- (திரை) -

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com