மனம்  திறந்தது!

சிவராமன் தன் பால்ய நண்பன் ஒருவனை மதிய உணவுக்கு அழைத்து வருவதாக மனைவி மாலாவிடம் கூறி இருந்தான்.
மனம்  திறந்தது!


சிவராமன் தன் பால்ய நண்பன் ஒருவனை மதிய உணவுக்கு அழைத்து வருவதாக மனைவி மாலாவிடம் கூறி இருந்தான். எனவே அவள் கடுகடுப்பாக இருந்தாள். மதிய உணவுக்கு வந்திருந்த கணவனின் அந்த நண்பன் சந்நியாசி கோலத்தில் இருந்தான். “

""அவனுக்கு மணமாகவில்லை என்று நினைக்கிறேன். என்னுடன் ஒன்றாம் வகுப்பு படித்த பால்ய நண்பன். உனது கோபத்தை காட்டாமல் தயவு செய்து சிரித்துக் கொண்டு பரிமாறு''” என்றான் சிவராமன்.

சிவராமனின் மனைவிக்கு உபசாரம் செய்வதெல்லாம் பிடிக்காது! கடுகடுவென்றுதான் இருப்பாள்! ""உக்கும்'' என்று கன்னத்தில் இடித்துக் கொண்டாள் அவள். உணவுப் பாத்திரங்களைக் கொண்டு வந்து "டொக்...டொக்'கென்று வைத்தாள். சந்நியாசி அதை கண்டு கொள்ளவில்லை.

இலையில் உணவு பரிமாறப்பட்டதும் சாப்பிட ஆரம்பித்தார். 

சிறிது நேரம் கழித்து தான் மாலா கவனித்தாள். அந்த சந்நியாசி நண்பன் சாப்பிடும் கைகளை மூடிக் கொண்டு சாதத்தில் வைத்து எடுத்தார்! அவர் கையில் ஓரிரு பருக்கைகளே ஒட்டியிருந்தன. அதையே அவர் உண்டார்.

மாலாவுக்கு பொறுக்கவில்லை. அவளுக்கு எரிச்சலாகிவிட்டது! 

“""இப்படி கைகளை மூடிக்கொண்டு சாதத்தில் ஒத்தி எடுத்தால் நாலைந்து பருக்கைகள்தான் வரும்! அது உங்களுக்குத் தெரியாதா?....இப்படி நாலைந்து பருக்கைகளாகச் சாப்பிட்டால், எப்போ சாப்பிட்டு முடிப்பீர்கள்?''” என்றாள்.

“""நீங்க  மட்டும் உங்க மனதை மூடிக்கொண்டு வெறுப்போடுதானே உணவு பரிமாறினீங்க! மனதைத் திறந்து வைத்தால்தானே முகத்தில் புன்னகை உருவாகும்! மகிழ்ச்சி நிழலாடும்! அருள் உன் இல்லத்தைத் தேடி வரும்! இதையெல்லாம் வரவிடாமல் நீங்க மட்டும் ஏன் உன் மனத்தை மூடி வைத்திருக்கீங்க?'' ” என்றார் சாமியார்.

“""ஐயா... என்னை மன்னித்துவிடுங்கள்! எல்லா விருந்தினர்களையும் இப்படியே உபசரித்து எனக்குப் பழகிப் போய்விட்டது! இனி விருந்தினர்களை இனிய முகத்தோடு வரவேற்பேன்!...''” என்று கூறியதோடு நில்லாமல் மனம் திறந்து அவரை விழுந்து விழுந்து உபசரித்தாள். 

சந்நியாசியும் கைகளைத் திறந்து அள்ளிச் சாப்பிட்டார்! சிவராமனின் மனைவிக்குச் சிரிப்பு வந்துவிட்டது! அங்கு மகிழ்ச்சி நிழலாடியது!

""அட, நம் பால்ய நண்பன் உண்மையிலேயே சாமர்த்தியமான சந்நியாசிதான்!...'' என எண்ணி இறுமாந்தான் சிவராமன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com