கிறிஸ்துமஸ் குடில்!

ஆறாம் வகுப்பு பயிலும் ஆன்டனி, தன் தாய் மரிய கிறிஸ்டியோடு கடைக்குப் போய் காய்கறி வாங்கிக்கொண்டு வந்தான். அப்போது எதிரே வந்த ஆன்ட்ரூஸ், ""ஆன்டனி! .... நம்ம ஊர் அந்தோணியார் கோயில்ல பெரிய
கிறிஸ்துமஸ் குடில்!

ஆறாம் வகுப்பு பயிலும் ஆன்டனி, தன் தாய் மரிய கிறிஸ்டியோடு கடைக்குப் போய் காய்கறி வாங்கிக்கொண்டு வந்தான். அப்போது எதிரே வந்த ஆன்ட்ரூஸ், ""ஆன்டனி! .... நம்ம ஊர் அந்தோணியார் கோயில்ல பெரிய கிறிஸ்துமஸ் குடில் அமைச்சிருக்காங்களாம்!.... தத்ரூபமாக இருக்காம்!.... பெத்தலஹேம் நகரில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு பாலனின் பிறப்பு அன்று நிகழ்நத நிகழ்வுகளை மிக நேர்த்தியாக அந்தக் குடிலில் அமைச்சிருக்காங்களாம்! பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் இந்த அருமையான அழகான கிறிஸ்துமஸ் குடிலைப் பார்த்துவிட்டு போறாங்களாம்! .....

""அப்படியா!'' என்றான் ஆன்டெனி.

""ஆமாம் ஆன்டனி,.... நானும் அந்தக் குடிலைத்தான் பார்க்கப் போறேன்... நீயும் வர்றியா?.... போகும் போது ஆலனையும் கூட்டிக்கிட்டுப் போலாம்'' என்றான் ஆன்ட்ரூஸ்.

""ஆலன் வீட்டிற்கா?...... சுத்த போர்டா!... அவன் வீட்டிலே ஏகப்பட்ட ஆடுகள்!...... மாடுகள்.... ஒரே சாணி மயம்!.... நான் ஒரு வாட்டி அவன் வீட்டுக்குப் போனேன்....அப்போ.....''

""என்ன ஆச்சு?''

""அவன் கையிலே சாணியை அள்ளி, ஒரு கூடையிலே போட்டு, அவன் பாட்டிகிட்டே கொண்டு போய்க் கொடுத்துக்கிட்டிருந்தான்.... அவன் பாட்டி அதை வரட்டியாகத் தட்டிக்கிட்டு இருந்தாங்க.... எனக்கு ரொம்ப அருவருப்பாப் போச்சு!.... நான், முகத்தைச் சுளிச்சுக்கிட்டு அவன் மனசு நோகறாமாதிரி பேசிட்டேன்....நான் அவன்கூடப் பேசி ரொம்ப நாளாச்சு! இப்போ நாம போய் அவனைக் கூப்பிட்டா அவன் நம்ம கூட வருவானோ என்னவோ!.... வேணாம்!... நாம ரெண்டு பேர் மட்டும் போயிட்டு வந்துடலாம்!''

""சரி'' என்று சம்மதித்தான் ஆன்ட்ரூஸ். அம்மாவிடமும் சொல்லிக்கொண்டு ஆன்ட்ரூúஸாடு உற்சாகமாகக் கிளம்பினான் ஆன்டனி.

அந்தோணியார் கோயில்ஆலய வளாகத்தில் ஏராளமானோர் குழுமி நின்று கிறிஸ்துமஸ் குடிலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆன்டனியும் ஆர்வத்தோடு அந்தக் குடிலைப் பார்த்தான். அவன் இதற்கு முன் இந்த மாதிரியான குடிலைப் பார்த்ததே இல்லை.

பசுமாடுகளும், கன்றுகளும், செம்மறி ஆடுகளும் அந்தக் குடிலுக்குள் படுத்தும், நின்றும் அசைபோட்டுக்கொண்டிருந்தன. புல் பூண்டுகள், வைக்கோல்களெல்லாம் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மாடுகள் போட்ட சாணங்கள், ஆட்டுபு புழுக்கைகள் எல்லாம் அப்புறப்படுத்தாமல் அப்படியே கிடந்தன. காணவந்தோர் அனைவரும் அவற்றை அருவருப்பாக நினைக்காமல் மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டிக்குள் இருந்த யேசு பாலகனைத் தொட்டு வணங்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சி ஆன்டனியின் மனதில் மாற்றத்தை உண்டு பண்ணியது.

வீட்டிற்குத் திரும்பும்போது ஆன்ட்ரூûஸ அழைத்துக் கொண்டு ஆலன் வீட்டிற்கு வந்தான் ஆன்டனி.

""நீதான் அவன் கூடப் பேசமாட்டேன்னு சொன்னியே! இப்போ நீயே ஆலன் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போறியே!'' என்று கேட்டான் ஆன்ட்ரூஸ்.
மெளனமாக நடந்து கொண்டிருந்த ஆன்டனி ஆலனைக் கண்டதும், ""என்னை மன்னிச்சுடு ஆலன்!.... நான் உன் வீட்டிற்கு வந்தபோது, நீ மாட்டுச் சாணியை அள்ளிக்கிட்டிருந்ததைப் பார்த்து, உன் மனசு நோகறாமாதிரி பேசிட்டேன்..... எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு..... உலகில் அன்பை விதைத்த யேசு பாலன்கூட மாட மாளிகையில் பிறவாமல் ஏழைகளுக்கு வாழ்வு தரும் மாட்டுக்கொட்டகையில்தான் பிறந்திருக்கிறார்!..... மாட்டுக்கொட்டகையோடு கூடிய குடிலும்,.... எளிய வாழ்க்கையின் அற்புதத்தையும் இன்று கண்டு கொண்டேன்!..... தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த அந்தோணியார் ஆலய கிறிஸ்துமஸ் குடில் என்னை மனம் மாறச் செய்து விட்டது.... என்னை மன்னிச்சுடு ஆலன்!''
அந்தக் கணமே ஆன்டனியின் வசை மொழிகளை மன்னித்து மறந்தான் ஆலன்.
ஆன்ட்ரூஸூம், ஆன்டனியும், ஆலனும் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அந்தோணியார் கோயிலுக்குச் சென்று மீண்டும் யேசு பாலகனின் குடிலைப் பார்க்கச் சென்றனர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com