மரங்களின் வரங்கள்! - விழுதி மரம்!

நான் தான் விழுதி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் கடாபா ஃபிரட்டிகோசா (கடாபா இண்டிகா) என்பதாகும். நான் சப்பின்டாசேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு விளச்சி மரம் என்ற வேறு பெயரும் உண்டு.
மரங்களின் வரங்கள்! - விழுதி மரம்!
Published on
Updated on
2 min read

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?

நான் தான் விழுதி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் கடாபா ஃபிரட்டிகோசா (கடாபா இண்டிகா) என்பதாகும். நான் சப்பின்டாசேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு விளச்சி மரம் என்ற வேறு பெயரும் உண்டு. நான் சீனாவை தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரமாவேன். ஆனால், நான் சைவ சமயக் குரவர் நால்வர் காலத்தின் முன்பிருந்தே தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்.

என் இலைகள் தனித் தனியாக இருக்கும். என் மலர்கள் வெண்ணிறத்திலும், காய்கள் சிவப்பு நிறத்திலும், தனிச் சிறப்பு வாய்ந்த நறுமணத்துடன் இருக்கும். இந்த காரணத்திற்காக என்னை உலகின் பல பாகங்களில் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. என் இலை, காய் மற்றும் வேர்கள் அதிக மருத்துவ பலன்கள் கொண்டவை.

வாத வியாதிகளைப் போக்கும் குணம் என்னிடம் உண்டு. என் இலைகளுக்கு சகல விதமான நோய்களையும் போக்கும் தன்மை உள்ளது. என் இலைகளை மசிய அரைத்து வீக்கங்கள், கட்டிகள் மீது தடவினால் அது இருந்த இடம் தெரியாது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு நான் அரிய மருந்து. என் இலைகளை நன்கு அலசி சாறெடுத்து, அதில் கால் குவளை நல்லெண்ணெய் சேர்த்து தினமும் பருகி வந்தால், கரு முட்டைகளின் உருவாக்கம் அதிகரித்து விரைவில் கருவுற்று நலமுடன் குழந்தைப் பேறு ஏற்படும்.

குழந்தைகளே, உங்கள் மூட்டுகளில் நீர் கோர்த்துக் கொண்டு, வலி, வீக்கம் ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா, கவலை வேண்டாம், என் இலைகளுடன், சிறிது மிளகையும் போட்டு தூளாக்கி, பூண்டு, சீரகம், விளக்கெண்ணெயில் வதக்கி தாளித்து இரசம் போல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மூட்டுகளில் நீர் வடிந்து உடல் வலிகள் நீங்கும். சளி, இருமல், ஜுரம் போன்ற பாதிப்புகள் விலக என் இலைகளை அரைத்துச் சாறெடுத்து அதை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தடவி குளித்து வந்தால் இருமல், சளி, காய்ச்சல் ஓடியே போய்விடும்.

கையளவு விழுதி இலையை எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று, சுவைத்து, அதில் ஒரு பகுதியை விழுங்கிய பின், மீதி இருப்பதை தாடையில் அடக்கி வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து ஓடலாம், இப்படி ஓடுவதால் களைப்பு, இளைப்பு இருக்காது என்கிறார் புலிப்பாணி எனும் சித்தர்.

எங்களை அழிப்பதால், சுற்றுச் சூழல் பாதிப்படைந்து வெப்பச்சலனம் ஏற்பட்டு, மழைப்பொழிவு குறையும்.

குழந்தைகளே, நானும் இப்போது அழியும் தருவாயில் தான் இருக்கேன். பல மருத்துவக் குணங்களை கொண்ட என்னை காப்பாற்ற வேண்டியது நீங்களல்லவா?

நான் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியிலுள்ள திருவீழிமிழலை அருள்மிகு வீழிநாதேவரர் திருக்கோவிலில் ஸ்தல மரமாக இருக்கேன். நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம் !

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com