அங்கிள் ஆன்டெனா
By -ரொசிட்டா | Published On : 09th November 2019 02:15 PM | Last Updated : 09th November 2019 02:15 PM | அ+அ அ- |

கேள்வி: இந்த அண்டத்தில் நாம் மட்டும் (பூமி மட்டும்) தனியாக இருக்கிறோமா அல்லது வேறு பூமிகள் உள்ளனவா, உயிரினங்கள் உள்ளனவா?
பதில்: வெகுகாலமாக எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கேள்வி, இதுதான்.
நம்மிடம் மிகவும சக்திவாய்ந்த டெலஸ்கோப்புகள், ராக்கெட்கள் இருந்த போதிலும் இந்தக் கேள்விதான் இன்னும் மனிதனைத் துளைத்துக் கொண்டிருக்கிறது.
கோடிக்கணக்கான கிரகங்கள் அண்டவெளியில் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விட்டோம். ஆனால் அத்தனைக் கிரகங்களுக்கும் ராக்கெட்டுகளை அனுப்பி ஆராய்ச்சி செய்வது என்பது இயலாத காரியம்.
ஆனால், பலர் வேற்றுகிரகவாசிகளைப் பார்த்ததாக இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து மீண்டும் தங்கள் கிரகங்களுக்குத் திரும்பி விடுகிறார்கள் என்றெல்லாம் பல திரைப்படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை.
இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் இந்தக் கேள்விக்கு மட்டும் இன்னும் சரியான விடை கிடைக்கவில்லைதான். ஒருவேளை, நீங்கள் எல்லோரும் பெரியவர்களாக ஆன பின்னர் இதற்குச் சரியான விடை கிடைக்கலாம்.