விடுகதைகள்
By -ரொசிட்டா | Published On : 09th November 2019 02:08 PM | Last Updated : 09th November 2019 02:08 PM | அ+அ அ- |

1. வாயிலே தோன்றி வாயிலேயே மறையும் பூ, என்ன பூ?
2. சட்டையைக் கழற்றினால் சத்துணவு...
3. அடிபடாத பிள்ளை, அலறித் துடிக்குது...
4. வயதானால் கிடைக்கும் இன்னொரு கை...
5. சீவச் சீவ குறைந்துகொண்டே போவான்....
6. முதலில் காற்றைக் குடிப்பான், பின்னர்
காற்றிலே பறப் பான்...
7. வாலால் நீர் குடிக்கும், வாயால் பூச்சொரியும்...
8. படபடா ஆசாமி, மனதுக்குள் இடம் பிடிப்பான்....
விடைகள்
1. சிரிப்பூ, 2. வாழைப்பழம்
3. சங்கு, 4. வழுக்கை, 5. பென்சில்
6. பலூன், 7. திரிவிளக்கு,
8. பட்டாசு