கருவூலம்

ஸ்டார் வார்ஸ், அவென்ஜர்ஸ், எக்ஸ் மேன் போன்ற திரைப்படங்களில் வருவது போல குட்டி ரோபோக்கள் தயாராகி வருகின்றன. இவை மிகவும் குட்டியாக இருக்கும்; உங்களைப் போல சுட்டியாகவும் இருக்கும். இவை மினி
கருவூலம்


குட்டி ரோபோக்கள்

ஸ்டார் வார்ஸ், அவென்ஜர்ஸ், எக்ஸ் மேன் போன்ற திரைப்படங்களில் வருவது போல குட்டி ரோபோக்கள் தயாராகி வருகின்றன. இவை மிகவும் குட்டியாக இருக்கும்; உங்களைப் போல சுட்டியாகவும் இருக்கும். இவை மினி ரோபோக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இவற்றால் தரையில் உருளவும்  நீரில் மிதக்கவும் நீச்சல் அடிக்கவும் வானில் பறக்கவும் முடியும். தேவை ஏற்பட்டால் இவை (நான்கைந்து மினி ரோபோக்கள்) அனைத்தும் ஒன் றாக இணைந்து ஒரே ரோபாகவும் மாறி விடும்.
இவற்றால் தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளவும் முடியும், டிரான்ஸ்பார்மர் படங்களில் வருவது போல. (கார்கள் ரோபோக்களாக மாறுவதை இத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்) தங்களை விதவிதமான உருவங்களுக்கு மாற்றிக் கொள்ளும். இவை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளில் தயாரிப்பு.
சரி, இவை எதற்கு உதவும் என்று கேட்கிறீர்களா?  இவை விண்ணில் பயணிக்கக் கூடியவை. வேற்று கிரகங்களைத் தேடிச் சென்று அங்கு வேறு வகை உயிரினங்கள் (ஏலியன்ஸ்) வாழ்கின்றனவா என்பதைக் கண்டறிந்து நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய சக்தி படைத்தவை.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9}ஆம் தேதி இந்த வகை ரோபோக்களின் மாதிரி வடிவங்கள் தயாரிக்கப்பட்டு விட்டன. வெகு விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும்.
இவை பலவித உருவங்களுக்கு மாறக்கூடியவையாக இருப்பதால் இவற்றுக்கு "கோபாட்ஸ்' (இர்க்ஷர்ற்ள்) என்று பெயிரிட்டிருக்கிறார்கள்.
இவை ராக்கெட்களால் அடைய முடியாத இலக்குகளைக்கூட எளிதாகச் சென்றடையும். தங்களின் உருவத்தை மாற்றிக்கொண்டு மிகப் பெரிய உருண்டை கோளங்களாக மாறி வெகுதூரத்தில், மிகவும் சிக்கலான இடங்களில் அமைந்துள்ள கிரகங்களைக்கூட பறந்தும் உருண்டும் நீந்தியும் சென்றடையக்கூடிய திறன் பெற்றவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இவை வெற்றிகரமாகச் செயல்பட ஆரம்பித்து விட்டால் 2026}ஆம் ஆண்டு சனி கிரகத்துக்கு அனுப்பப்படலாம். பூமிக்கு அடுத்தபடியாக சனி கிரகத்தின் நிலாவான டைட்டனில் (பூமிக்கு சந்திரன் போல, சனி கிரகத்துக்கு டைட்டன் ஒரு நிலா) அதிக அளவில் திரவம் இருக்கிறது. இங்கு மீதேன், ஈதேன் போன்ற வாயுக்களும்  இருக்கின்றன என்பதால் அங்கு அனுப்பி, ஆராய்ச்சி செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.
டைட்டனில் மழை பெய்வதாகவும், எரிமலைகள் இருப்பதாகவும் குகைகள் இருப்பதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்றும் நம்பு
கிறார்கள். இந்த உயிரி னங்கள் எத்தகையவை, அவை நம்மைப் போல இருக்குமா அல்லது வித்தியாசமான உருவங்களைக் கொண்டிருக்குமா என்றெல்லாம் ஆய்வதற்கு இப்போது பயன்பாட்டிலிருக்கும் ராக்கெட்டுகளை விட இந்த குட்டி ரோபோக்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். 
இந்த விஞ்ஞானிகள் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்  விண்வெளியில் உள்ள நமது சொந்தக்காரர்களை (உயிரினங்கûளை) நீங்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்க லாம்!

நிறம் மாறும் ஆக்டோபஸ்!

பச்சோந்திகள் நிறம் மாறக்கூடியவை என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். இது போல ஆக்டோபஸ்களும் நிறம் மாறக்கூடியவை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
தங்களைத் தாக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் மறைந்திருந்து தங்களுக்கான உணவை வேட்டையாடுவதற்காகவும் இந்த வகை ஆக்டோபஸ்கள் தங்களின் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன.
இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி சொல்வதைக் கேளுங்கள்: 
""கடலுக்கடியில் வாழும் ஆக்டோபஸ்கள் சில சமயங்களில் எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக 

தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சரியான உதாரணங்களும் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது அது கிடைத்து விட்டது.
அலாஸ்காவில் வசிக்கும் டேவிட் ஸ்கீல் என்ற இளம் பெண் தனது சிறு வயதிலிருந்து ஒரு ஆக்டோபûஸத் தனது செல்லப் பிராணியாக வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த ஆக்டோபஸ் பற்றிய வீடியோ ஒன்றை அந்தப் பெண் அனுப்பியிருந்தாள். அந்த வீடியோவைப் பார்த்தவுடன் எனக்கு மயக்கமே வந்துவிட்டது.
அந்த ஆக்டோபஸ் தனக்குப் பசி ஏற்பட்டதும் உணவு கேட்பதற்காக தனது நிறத்தை மாற்றிக் கொள்வதை அந்த வீடியோவில் பார்த்தேன். அந்தப் பெண் உணவு கொடுத்ததும் மீண்டும் பழைய நிறத்துக்கு அது வந்துவிடுகிறது. இன்னும் என்ன ஆச்சரியம் என்றால், அதன் உணர்வுகளுக்கு ஏற்ப (அதாவது கோபம், வருத்தம், சந்தோஷம்) தனது நிறத்தை மாற்றுகிறது. இதுதான் மிக மிக அதிசயமாக இருந்தது.
இந்த ஆக்டோபஸின் பெயர் "ஹெய்ட்டி'.  தனது உணவுத் தேவையை உணர்த்த தனது மங்கிய பழுப்பு நிறத்திலிருந்து பளீரென்ற வெண்மை நிறத்துக்கும், அதன் பிறகு இருட்டு ஊதா நிறத்துக்கும் அப்புறம் அழுக்குப் பச்சை நிறத்துக்கும் தன்னை மாற்றிக் கொள்கிறது.
அதற்கு உணவாக அந்தப் பெண் ஒரு சிறிய நண்டை தொட்டிக்குள் போடுகிறாள். ஆக்டோபஸ் அந்த நண்டைக் கவ்விப் பிடித்துக்கொண்டு தொட்டியின் அடிப்பகுதிக்குச் சென்று சாப்பிட ஆரம்பிக்கிறது. இந்தச் சமயத்தில் அதன் நிறம் மேற்சொன்னவாறு மாறிக் கொண்டே இருக்கிறது.
மேலும் இந்த ஆக்டோபஸ் தூங்கும்போது சாப்பிடுவது போலக் கனவு காண்கிறது. அப்போதும் அதன் நிறம் விதவிதமாக மாறுகிறது. பச்சோந்திகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் உணவுக்காக வேட்டையாடும்போதும் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளக்கூடியவைதான். இதுபோல சிலவகை உயிரினங்கள் தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளத்தான் செய்கின்றன. ஆனால் தூங்கும்போது கனவு காண்பதும் கனவில் வரும் நிகழ்வுக்கு ஏற்ப நிறம் மாறுவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த செல்லப் பிராணி விதவிதமான விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடுகிறது. சமயங்களில் தொலைக் காட்சியைப் பார்த்து ரசிக்கின்றது. அந்தப் பெண்ணை நன்றாக அடையாளம் கண்டு கொள்கிறது. இதற்கு ஒரு படி மேலே போய் அந்தப் பெண்ணின் குழந்தையையும் அடையாளம் கண்டு கொள்கிறது. அந்தக் குழந்தை தொட்டிக்கு அருகே வந்தால் கண்ணாடியை ஒட்டி வந்து நின்றுகொண்டு அந்தக் குழந்தைக்கு விளையாட்டு காட்டுகிறது. இதெல்லாம் காண்போரை வியக்க வைக்கிறது''.
இப்படி சொல்லிக் கொண்டே போகிறார் அந்த விஞ்ஞானி. 
என்ன... உங்கள் வீட்டு மீன் தொட்டிக்குள்ளும் ஒரு ஆக்டோபûஸத் தூக்கிப் போட்டுக் கொள்ளலாம் என்ற ஆசை வருகிறதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com