

இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவை அமைப்பவர்கள்! குழந்தைகளை வளர்க்கும் முறையைப் பொறுத்தே நாட்டின் எதிர்காலம் அமையும்!
அறநெறியை மறந்துவிட்டால் அழிவொன்றே விளைவாகும்!
உலக வரலாற்றைப் படிப்பது சிறப்பு! அதனினும் சிறப்பு உலகில் வரலாற்றைப் படைப்பது!
நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது! அறிவில்லாத நற்பண்போ பயனற்றது!
வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மையே!
திட்டமிடப்படாத செயல் துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது!
நல்ல கருத்துக்களைப் பேசுபவன் விதைக்கிறான்! கேட்பவன் அதை அறுவடை செய்கிறான்!
கோபத்தை அன்பாலும், தீமையை நன்மையாலும்தான் போக்க முடியும்!
அறிவுள்ள அதிகாரம் சிறப்புறும்!
மனித சமுதாயத்தின் முன்னேற்றம் அதன் பண்பால் வரையறுக்கப்படுகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.