

ஒரு செடியில் முள்ளும் மலரும்;
முள்ளை எவரே விரும்புவர்?
அருமை மணமும் அழகும் நிறைந்த
மலரைத் தானே விரும்புவர்!
ஒரு முகிலில் இடியும் மழையும்;
இடியை எவரே விரும்புவர்?
பெருமைக் குரிய மழையைத் தானே
உயிராய் மதித்து விரும்புவர்!
ஒரு மொழியில் ஏச்சும் பேச்சும்;
ஏச்சை எவரே விரும்புவர்?
கரும்பின் சாறாய் சுவைக்கும் இனிய
பேச்சைத் தானே விரும்புவர்!
ஒன்று சொல்வேன் நன்று கேள் - நீ
உலகோர் விரும்பும் ஒருவனாய்
என்றும் மலர்போல், மழைபோல் சான்றோர்
இனிய சொல் போல் வாழ்க நீ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.