சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் ஒளி விழா நடக்கும் மாதத்தின் பெயர் ஒன்று கிடைக்கும். உங்களால் முடியாததில்லை... சீக்கிரம் கண்டுபிடித்து விடுவீர்கள்...

1.  இதில் ஆண்டு, மாதம், நாட்கள் எல்லாமே இருக்கும்...
2. இங்கே வித்தைகள் பல தெரிந்த கோமாளிகளைக் காணலாம்...
3.  வீடு கட்டித் தருபவரை இப்படி அழைப்பார்கள்...
4. சுட்டெரித்தாலும், நமக்கு அவசியம் தேவையானவன்...
5. யானையின் ஐந்தாவது கால் என்பார்கள்...

விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1. காலண்டர்,  
2. சர்க்கஸ்,  
3. கொத்தனார்,  
4. கதிரவன்,  
5. தும்பிக்கை.


வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : கார்த்திகை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com