
புகழைத் தேடி அலைய வேண்டாம். அது தானாகவே வரவேண்டும்.
உடலைத் தூய்மையுடன் வைத்திருங்கள். ஏனெனில் அது கடவுள் வாழும் இடம்.
சுயநலமற்ற சேவையே மகிழ்ச்சிக்கு வழி.
மன அமைதியை வேண்டிக்கொள்வதே நியாயமான பிரார்த்தனை.
பொன்னை இழந்தால் திரும்பப் பெறலாம். காலம் போனால் போனதுதான்.
கல்வியின் நோக்கம் நற்குணங்களைக் கற்பதே.
பொறுமையே தவம். திருப்தியே மகிழ்ச்சி. கருணையே புண்ணியம். கடவுளின் நாமமே இன்பம்.
பொருள் இல்லாதவன் ஏழை அல்ல.... ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.
இறைவனைப் பற்றிய நினைவு, தேனை மட்டும் அருந்தும் தேனீ போன்றது.
கடவுளை அடைய மிக எளிமையான வழி, பிறரிடம் அன்பு செலுத்துவதே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.