நினைவுச் சுடர்!: தாயின் முயற்சி

பால்டிமோர் நகரத்தில் ஒரு பள்ளி, அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மைக்கேல் பெல்ப்ஸ்  என்ற மாணவன் கொஞ்சம் மந்தமாக இருப்பது போல் ஆசிரியருக்குப் பட்டது. 
நினைவுச் சுடர்!: தாயின் முயற்சி


பால்டிமோர் நகரத்தில் ஒரு பள்ளி, அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மைக்கேல் பெல்ப்ஸ் என்ற மாணவன் கொஞ்சம் மந்தமாக இருப்பது போல் ஆசிரியருக்குப் பட்டது.
எல்லாத் தேர்வுகளிலும் அவன் மிகக் குறைவாகவே மதிப்பெண் பெற்றிருந்தான். ஆசிரியருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திடம் ஆலோசனை கேட்டார். சில சோதனைகளுக்குப் பிறகு மாணவன் மைக்கேலுக்கு "கற்றலில் குறைபாடு' இருப்பதை பள்ளி நிர்வாகம் உணர்ந்தது. மைக்கேலின் தாயை வரவழைத்து நிலைமையை விளக்கி அவனை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
மைக்கேலின் தாய்க்கு சற்று துக்கமாகிவிட்டது. கண்களில் நீர் சுரந்தது. அதைத் துடைத்துக்கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள். பள்ளி நீக்கிவிட்டாலும், தன்னம்பிக்கையுடன் குழந்தையின் அருகிலிருந்து அன்புடன் அவனுக்குப் பொறுமையாக வீட்டில் வைத்தே பாடங்களைச் சொல்லிக் கொடுத்தாள். கற்பதில் குறைபாடு இருந்ததால் அவள் நீண்ட நேரம் மகனுடன் செலவிட வேண்டியதாயிற்று. சலிக்காமல், மைக்கேலுக்கு இடைவிடாத பயிற்சி வழங்கினார் அவனது தாய். கொஞ்சம் கொஞ்சமாக மைக்கேல் கற்கும் திறனை வளர்த்துக் கொண்டான். மைக்கேல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டமும் பெற்றுவிட்டான்! அதைத் தவிர மைக்கேலுக்கு நீச்சலில் ஆர்வம் இருந்ததையும் அவனது தாய் உணர்ந்தார்.
நீச்சலில் அவனுக்கு இருந்த ஆர்வத்தை ஊக்குவித்தார் அவனது தாய். மைக்கேலுக்கு நீச்சல் பயிற்சியும் வழங்கினார். கடுமையான பயிற்சி தந்து விரைந்துசெயல்பட வைத்தார். அந்தக் குழந்தை பின்னர் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றது. பல போட்டிகளில் வெற்றியும் பெற்றான் மைக்கேல் பெல்ப்ஸ். பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றான்! அதில் உலகே வியக்கும் வண்ணம் 22 தங்கப்பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்தான்! அவர்தான் அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்!
இன்று மக்கள் அவரை, ""பால்டிமோர் புல்லெட்!'' என்று அன்புடன் அழைக்கின்றனர்!
""எனது எல்லாப் பெருமைகளும் என் தாயையே சாரும்!'' என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறிகிறார் மைக்கேல் பெல்ப்ஸ்!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com