

நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான்!
உன் பிள்ளை ஊனமாய்ப் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை ஊனமாக்காதே!
எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல.... ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்!
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை!
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும், உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது!
பணம் இருந்தால்தான் எனக்கு மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை!
ஒரு பெண்ணிற்குக் கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதாகும்!
நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமமாவான்!
எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.