பிரார்த்தனை

ஓர் ஊரில் ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரியில் மீனும், நண்டும், தவளையும், ஆமையும் நண்பர்களாக இருந்தன.
பிரார்த்தனை

ஓர் ஊரில் ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரியில் மீனும், நண்டும், தவளையும், ஆமையும் நண்பர்களாக இருந்தன. அவை வெகு நாட்களாக மழை பெய்யாததால் ஏரியில் நீர் குறைய ஆரம்பித்தது. இன்னும் சில நாட்களில் முற்றிலும் வற்றிவிடும் போல் தெரிந்தது.

ஒரு நாள் எல்லாம் கூடின.


ஆமை தன் நண்பர்களைப் பார்த்து, ""எனக்குத் தண்ணீர் இல்லேன்னா கவலையில்லை..... என்னாலே நிலத்திலும், நீரிலும் வாழ முடியும்!'' என்றது.
""நான் மட்டும் என்ன,.... தரையில் தாவித்தாவிக் குதித்துக்கொண்டு வாழ்வேன்!'' என்றது தவளை!
""நானும் அப்படித்தான்!.... எனக்குத் ஏரித்தண்ணீர் பற்றிய கவலையெல்லாம் இல்லை!.... நிலத்திலே நான் நடந்து போகும் அழகே தனி!'' என்று பெருமையாகச் சொன்னது நண்டு.
பாவம் மீன் அது என்ன செய்யும்?.... அதற்குத் தண்ணீரை விட்டால் ஏது கதி?.... அதனாலே மீன், சீக்கிரமா நல்லா மழை பெய்யணும்னு கடவுளை நல்லா வேண்டிக் கொண்டது!
மீனுடைய வேண்டுதலுக்குக் கடவுள் செவி சாய்த்தார்! கருமேகங்கள் திரண்டன! அட்டகாசமாக மழை பெய்தது! பூமியே குளுகுளுன்னு ஆகிவிட்டது. ஏரி நிரம்பிவழிந்தது. அழகான பறவைகள் ஏரியின் மீது பறந்தன. ஏரியின் கரைகளில் தாமரை மலர்களும், அல்லியும் பூத்தன.
நண்டுக்கும், தவளைக்கும் ஆமைக்கும் ஏரியை விட்டுப் போக மனமே இல்லை! மீனுடைய வேண்டுதலுக்கு அவை நன்றி கூறின.
ஆமை, தன் நண்பர்களைப் பார்த்து, ..."உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!' அப்படீங்கறதை நம்ம மீன் தங்கச்சி நல்லா நிரூபிச்சிடிச்சி!'' என்றது.
""ஆமாம்... ஆமாம்!'' என்றன தவளையும், நண்டும். மீனும் கடவுளுக்கு நன்றி சொன்னது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com