

கேள்வி: எல்லா வரிக்குதிரைகளுக்கும் குட்டிகளுக்கும் உடம்பில் வரிகள் இருக்கும்போது, தாய் வரிக்குதிரை எப்படி தனது குட்டியை அடையாளம் கண்டு கொள்ளும்?
பதில்: வரிக்குதிரைகள் தங்கள் குட்டிகளை 12-லிருந்து 14 மாதங்கள் வரை கருவில் சுமக்கின்றன. 12-வது அல்லது 14-வது மாதம்தான் குட்டி பிறக்கும். ஒரு குதிரை ஒரு முறைக்கு ஒரு குட்டிதான் போடும். மிகவும் அபூர்வமாக இரட்டைக் குட்டிகள் பிறப்பதுண்டு. ஆனால், பிறக்கும் இரட்டையர்களில் ஒருவர் பிறந்து சில மணி நேரங்களிலேயே இறந்து விடுவார்.
வரிக்குதிரைகள் எப்போதும் குடும்பம் குடும்பமாகத்தான் வசிக்கும். எங்கே போனாலும் தங்களது குட்டிகளையும் பாதுகாப்பாக கூடவே (குறிப்பிட்ட காலம் வரை) வைத்துக் கொள்ளும். இதனால் குட்டிகளை அடையாளம் காண்பதில் அவைகளுக்குச் சிரமமே ஏற்படுவதில்லை.
அப்படியில்லை என்றாலும் தங்கள் தங்கள் குட்டிகளை அடையாளம் கண்டுகொள்ள கடவுள் அவைகளுக்கு ஒரு வசதியை வைத்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வகை (ல்ஹற்ற்ங்ழ்ய்), அதாவது வரிகளின் அமைப்பு உண்டு. அதை வைத்துத் தாய் தனது குட்டியை எளிதாக இனம் கண்டு கொள்வாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.