கருவூலம்: உலகின் உயரமான கட்டடம்! - "புர்ஜ் கலீபா!'

உலகில் உள்ள கட்டடங்களில் மிக உயரமான கட்டடம் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா. விண்ணைத் தொடும் உயரத்தில் ஒரு கட்டடத்தை அமைப்பதில் உள்ள சவால்களை முறியடித்து இத்த சாதனையை இந்தக் கட்டடம் பெற்றுள்ளது.
கருவூலம்: உலகின் உயரமான கட்டடம்! - "புர்ஜ் கலீபா!'


உலகில் உள்ள கட்டடங்களில் மிக உயரமான கட்டடம் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா. விண்ணைத் தொடும் உயரத்தில் ஒரு கட்டடத்தை அமைப்பதில் உள்ள சவால்களை முறியடித்து இத்த சாதனையை இந்தக் கட்டடம் பெற்றுள்ளது. அபுதாபி மற்றும் துபாய் அரசின் கூட்டு நிதியால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டடத்திற்கு அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான்' அவர்களைக் கவுரவிக்கும் வகையில் புர்ஜ் கலீபா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது போல ஒரு பிரம்மாண்டமான கட்டடத்தை உருவாக்கும் திட்டம், "அட்ரியான் ஸ்மித்' என்பவரால் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. இவர்தான் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தை வடிவமைத்தவர்!  "பில் பெக்கர்' என்பவர் "புர்ஜ் கலீபா' கட்டடத்தைக் கட்ட  தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். 

இக்கட்டடத்தைக் கட்டுவதற்காக பார்லாண்ட் பகுதியில் 33 லட்சத்து 31 ஆயிரத்து 100 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. 

இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 2004 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 - ஆம் தேதி தொடங்கப்பட்டது.  ஐந்து ஆண்டுகள் இடைவிடாமல் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் 2009 - ஆம் ஆண்டு அக்டோபர் 1 - ஆம் தேதி நிறைவடைந்தது. 2010 - ஆம் ஆண்டு ஜனவரி 4 - ஆம் தேதி, அமீரகப் பிரதமரும், துணை அதிபருமான, "ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம்' தலைமையில் இந்த பிரம்மாண்ட கட்டடம் திறக்கப்பட்டது. இதனை கட்டி முடிக்க மொத்தம் 8 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவானது. இக்கட்டடம் 2717 அடி உயரம் கொண்டது. இவ்வளவு  உயரத்தையும், கனத்தையும் தாங்கும் அளவு அடித்தளம் மிகவும் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது! 

இந்தக் கட்டடத்தில் மொத்தம் 30 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. கட்டடத்தில் 9 நட்சத்திர ஹோட்டல்களும் உள்ளன. 57 லிஃப்டுகள், 8 திசைகளிலும் உச்சிவரை சென்று திரும்பும் நகரும் படிக்கட்டுகள் (உநஇஅகஅபஞதந) அமைக்கப்பட்டுள்ளன. தரையில் இருந்து உச்சிக்குச் செல்ல மொத்தம் 2 ஆயிரத்து 909 படிக்கட்டுகள் உள்ளன. கட்டடத்திலுள்ள ஜன்னல்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 348 ஆகும். 

இதனை முழுவதும் சுத்தம் செய்ய 4 மாதங்கள் பிடிக்கிறதாம். இதற்காக 36 தொழிலாளர்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இந்த பிரம்மாண்ட கட்டடத்தின் வெளிப்புறம் உறுதியான கண்ணாடி, அலுமினியம், ஸ்டீல் மற்றும் கான்கிரீட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கண்ணாடிகளில் உள்ள விசேஷ ஒளிரும் திரையில் வண்ணமயமாக படங்கள் ஒளிர்கின்றன. துபாய்க்குச் சுற்றுலா வருபவர்கள் இக்கட்டடத்தைப் பார்த்து பிரமிக்கின்றனர். இக்கட்டடத்தால் துபாயின் சுற்றுலா வருமானம் பெருகியுள்ளது எனக் கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com