மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆசைகள்!

பள்ளிக்கூடம் போகவேண்டும்!பாடமெல்லாம் படிக்க வேண்டும்!துள்ளித் துள்ளி ஆட  வேண்டும்!

News image
Updated On :7 நவம்பர் 2020, 12:30 am

பூதலூர் முத்து

பள்ளிக்கூடம் போகவேண்டும்!
பாடமெல்லாம் படிக்க வேண்டும்!
துள்ளித் துள்ளி ஆட  வேண்டும்!
தோழரோடு பழக வேண்டும்!

ஓவியங்கள் வரைய வேண்டும்!
உயர்ந்த மலையில் ஏற வேண்டும்!
தாவித் தாவி மேலெழும்பும் 
கடல் அலையைக் காண வேண்டும்!

ஆற்றினிலே நீந்த வேண்டும்!
அழகு மீன்கள் காண வேண்டும்!
ஊற்று நீரை அள்ள வேண்டும்!
உண்டு சுவை அறிய வேண்டும்!

குயிலோசை, கிளிமொழியைச் 
செவி கொடுத்துக் கேட்க வேண்டும்!
வயிற்றுக்குச் சோறு தரும் 
வயல் வெளியைக் காண வேண்டும்!
திருவிழாக்கள் காண வேண்டும்!
தேர் அழகை ரசிக்க வேண்டும்!
தெருக்கூத்து கரகாட்டம் 
தூங்காமல் பார்க்க வேண்டும்!

வானவில்லில் பல வண்ணம் 
வந்த விதம் அறிய வேண்டும்!
காட்டுக்கு உள் சென்று 
காட்சியெல்லாம் காண வேண்டும்!

பாட்டெல்லாம் பாட வேண்டும்!
பச்சை மரம் ஏற வேண்டும்!
அணிலோடும் சிட்டோடும் 
அன்பாகப் பழக வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.