
வண்ண வண்ண அழகிலே
வடிவம் பலவும் கொண்டது!
எண்ணும் எழுத்தும் பளிச்சிடும்!
எல்லோரிடமும் உள்ளது!
கையால் மெல்ல அழுத்தியே
காதில் வைத்துப் பேசிட
மெய்யாய் நமக்கு உதவுது!
மெய் சிலிர்க்க வைக்குது!
அலையில் தவழ்ந்து உறவினை
அழைத்துக் குரலைத் தந்திடும்!
வலையில் இருக்கும் இணைப்பினால்
விரும்பும் அனைத்தும் தந்திடும்!
தேடித் தகவல் பெற்றிட
திகட்டா இசைகள் கேட்டிட
கல்வியோடு காட்சிகள்
அனைத்தும் இதில் ஒளிர்ந்திடும்!
கையில் தவழும் பேசியை
காதில் நீண்ட நேரமாய்
மெய்மறந்து பேசினால்
மென்மை நரம்பு நோகுமே!
சுருக்கமாகப் பேசுவோம்!
செலவைக் குறைக்கப் பழகுவோம்!
காதில் வைக்கும் கருவியில்
சத்தம் குறைத்துக் கேட்டிடு!
நன்மைக்காகத் தோன்றிய
நல்ல அழகுப் பேசியை
நாளும் பயன்படுத்தி நாம்
நன்மை மலரச் செய்குவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.