தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மரங்களின் வரங்கள்!:  மென்மையானவன்- தீக்குச்சி மரம்

நான் தான் தீக்குச்சி மரம் பேசுகிறேன்.    என்னுடைய தாவரவியல் பெயர் அய்லாந்தஸ் எச்செல்சா என்பதாகும்.  நான் சிமாரவ்பாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவன்.

News image
Updated On :3 அக்டோபர் 2020, 12:30 am

பா.இராதாகிருஷ்ணன்

குழந்தைகளே நலமா,

நான் தான் தீக்குச்சி மரம் பேசுகிறேன்.    என்னுடைய தாவரவியல் பெயர் அய்லாந்தஸ் எச்செல்சா என்பதாகும்.  நான் சிமாரவ்பாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவன்.   என்னை இந்தியில் ககள்து எனவும், மலையாளத்தில் மட்டிப்பால் எனவும், தெலுங்கில் பீப்பெட்தமனு எனவும், மராத்தியில் ககள்தபு எனவும் அழைக்கிறாங்க.

நான் காடுகளில் அதிகமாகக் காணப்படுவேன்.  எனக்கு அதிகமாக பராமரிப்புத் தேவையில்லை.   நான் மென்மையான மர வகையைச் சேர்ந்தவன் என்பதால் தச்சர்கள் என்னை விரும்பி உபயோகிப்பாங்க. ஏன்னா, அறுப்பது, சீர்செய்வது மிகவும் சுலபம்.  நான் மழை குறைவான பகுதிகளிலும், வளமற்ற மண்ணிலும், தரிசு நிலங்களிலும்  வளரும் தன்மையன்.

தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நான் அதிகமாகக் காணப்படறேன். 
குழந்தைகளே, நான் மென்மையாக இருப்பதால் என் மரத்திலிருந்து தீக்குச்சி பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.  வளர்ந்த மரத்தின் 15 செ.மீ. சுற்றளவுக்கு மேலே உள்ள அனைத்துக் கிளைகளும் மரமும் தீக்குச்சி தயாரிக்க உதவும். என் பக்கக் கிளைகளை வெட்டி ஏழை  மக்கள் அடுப்பு எரிக்க பயன்படுத்தறாங்க.

நான் பென்சில், எழுது பலகை, நசடு பலகை தயாரிக்க பயன்படுகிறேன்.  அது மட்டுமா குழந்தைகளே, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் மரப்பெட்டி, பழ வகைகளைத் தாங்கும் பெட்டி, தேநீர் மற்றும் ஒட்டுப்பலகை போன்றவை என்னிடமிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன.  கட்டட வேலைகளுக்கான முட்டுப் பலகைகளாகவும் நான் பயன்படுகிறேன்.  என் வேர்கள் எப்போதும் பசுமையாக இருப்பதால் மண் அரிப்பை தடுக்க உதவுது.  

என் இலைகளையும், பட்டைகளையும் சுடு தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு சூடு ஆறியதும் காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் காய்ச்சல் நீங்கும், சிறுநீர்கட்டு விலகும். 

குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமா நம் நாட்டின் தீப்பெட்டிகளுக்கான கச்சாப் பொருள் தேவையை 95 சதவீதம் மரக்குச்சியும், 5 சதவீதம் மெழுகு குச்சிகளும் நிறைவு செய்கின்றன.  இந்த 95 சதவீத மரக்குச்சி உற்பத்தியில் சுமார் 80 சதவீதம் தமிழ்நாட்டில் நான் உற்பத்தி செய்யப்படுகிறது. என் இலைகள் கடும் வெப்பத்திலும் பசுமையாக இருக்கும்.   என் இலைகளை கால்நடைகள் உண்ணாது. என் தழைகள், இலைகள் மண்புழுவிற்கு உணவாக பயன்படுகின்றன.

குழந்தைகளே, உழைத்துக் களைத்து வருபவர்களுக்கு நல்ல நிழலைத் தருகிறது மரங்கள்.  அவர்களின் உடல் சோர்வையும், உள்ளச் சோர்வையும் பல வகைகளில் நீக்கி கட்டணமில்லா மருத்துவராக விளங்குகிறது.  தன்னிடமுள்ள செல்வத்தை ஏழை, எளிய மக்களுக்கு அள்ளித் தரும் வள்ளல் போல் ஒவ்வொரு மரங்களும் உள்ளன.  அதாவது, மரம் தன்னிடமுள்ள பூக்களை, காய்களை, கனிகளை தன்னை நாடி வருபவர்களுக்குத் தந்து பசி, பிணி நீக்கி மாண்புடன் விளங்குகிறது.

மனிதர்களை, மாண்புடையவராக மாற்றி வழி நடத்திச் செல்வது மரங்களே. மரங்கள் யாரிடமும் எந்தப் பேதமும் பார்ப்பதில்லை.  தன்னை வெட்டுபவனுக்கே நிழல் கொடுத்து உதவும்.

குழந்தைகளே, ஒரு மரம் வருடத்திற்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதே சமயம் ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் 2.6 டன் கார்பன்டை ஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன. அதாவது. நிழல் தரும் ஒரு மரம் கோடைக் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும். மரம் உங்களுக்கு மூன்றாவது கரம்.   மரங்கள் வளர வளர, மழைப் பொழிவு அதிகமாகும்.  மழை இருந்தால், வளம் பெருகும்,  வறுமை ஒழியும், மரங்களை நேசித்து ஆனந்தமாய் இருங்கள்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.