

எல்லோர்க்கும் தான் தாத்தா! - மகாத்மா
காந்தி எனும் நம் தாத்தா!
பாலரோடு, இளையோர்க்கும்
மூத்தோர்க்கும் வழிகாட்டி!
இடுப்பில் அரையாடை !
தோளில் ஒரு துண்டு!
படிப்பினையாய் வாழ்ந்தார்!
பாரோர் வியப்புற்றார்!
கை ராட்டையிலே நூல் நூற்று -கீதை
வழியில் தான் நடந்து
கடமையை முடித்திட்டார்
கண்டோம் நாம் விடுதலையை!
கடிகாரம் பார்க்கவில்லை!
துளிகாலம் பிசகவில்லை! - தேச
விடுதலைக்காகத் தன்
வாழ்நாளை அர்ப்பணித்தார்!
உயிர்வாழச் சிறிதுணவு! - மானம்
உடல் மூடத்தான் உடைகள்!
சுயமாய் உழைத்துண்ணும் - வாழ்வே
சொர்க்கம் எனச் சொன்னார்!
உள்ளம் எல்லாம் தூய்மை
உதிர்த்ததெல்லாம் வாய்மை!
அஹிம்சை ஆயுதத்தால் - இவர்
அந்நியரை வென்றுவிட்டார்!
வேற்றுமை எல்லாம் விலக்கி
ஒற்றுமையை இவர் வளர்த்தார்!
கண்கண்ட தெய்வம் இவர் - எனக்
கரம் கூப்பி வணங்கிடுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்

சகல தோஷங்கள் நீங்கும் சக்கரபாணி கோயில்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

வரலாற்றில் முதல்முறை..! ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் - 35 விமானம்!

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

