

பிறந்தவுடன் குழந்தைகள் அழுவது ஏன்?
பதில்: பிறந்தவுடன் எல்லாக் குழந்தைகளும் அழுவது இல்லை. சில விநாடிகள் சென்ற பிறகுதான் அழத் தொடங்கும்.
இதற்குக் காரணம், பத்து மாதங்களாக அம்மாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவிட்டு வெளி உலகுக்கு வருவதுதான். மேலும் சில குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து சிரமப்பட்டு வெளியே வந்திருக்கும். இதுவும் ஒரு காரணம்.
தாயின் தொடர்பு விட்டுப் போவதால் அழும் குழந்தையைத் தாயின் அரவணைப்பில் வைத்து விட்டால், உடனே அழுகையை நிறுத்தி விடும்.
அதன்பிறகு ஏறக்குறைய எட்டு மணி நேரத்துக்கு எந்தக் கவலையுமில்லாமல் குழந்தை நிம்மதியாக உறங்க ஆரம்பித்து விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.