தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆல் போல் வாழணும்!

மலையைப் போல ஆல மரமும் அழகாய்த் தோன்றுதே! - அது தலைக்கு மேலே கிளைகளை விரித்து 

News image
Updated On :10 அக்டோபர் 2020, 12:30 am

புலேந்திரன்

மலையைப் போல ஆல மரமும் 
அழகாய்த் தோன்றுதே! - அது 
தலைக்கு மேலே கிளைகளை விரித்து 
குடை போல் நிற்குதே!

சுட்டுப் பொசுக்கும் வெயிலைத் தாங்கி 
நிழலைக் கொடுக்குது! - மழை 
கொட்டும்போது நனைந்திடாமல் 
குடையாய்க் காக்குது!

தன்னை நாடிப் பறந்து வரும் 
பறவைகள் அனைத்துமே 
தங்கிக்கொள்ளக் கிளைகள் விரித்து 
இடத்தைக் கொடுக்குதே!

குட்டிக் குட்டி ஆலம் பழங்கள்
மிகவும் இனிக்குது! - அவற்றைக் 
கொத்திக் கொத்தி பறவைகள் தின்று 
பசியைப் போக்குதே!

ஆல இலையும் ஆடு தின்ன 
உணவாய் ஆனதே! - பல்லும் 
ஆலம் விழுதால் துலக்கி வந்தால் 
உறுதி ஆகுமே!

சிறுவர் ஊஞ்சல் ஆட உதவும் 
சிறிய கிளைகளே! - பெரிய 
விழுதுகள் தரையில் ஊன்றி நன்றாய்
மரத்தைத் தாங்குமே!

வாழ்ந்தால் ஆல மரத்தைப் போல 
வாழ வேண்டுமே! - நாம் 
வாழ்ந்ததைப் பற்றிப் பலரும் போற்றிப் 
புகழ வேண்டுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.