
செயல்களை தூய்மையாக்குபவனே சிறந்த அறிவாளி எனப் போற்றப் படுகிறான்.
தனது வருவாயைக் காட்டிலும் குறைத்தே செலவு செய்ய வேண்டும் என்பதுதான் சிறந்த தர்மம்.
ஒருவன் மேன்மை அடைவதற்குக் காரணம் அவனது குணமும், நன்னடத்தையுமேயன்றி அவனது செல்வமோ, அறிவோ அல்ல.
இயற்கையிலேயே சிறந்த மனிதர்கள் அடுத்தவர்கள் துயர் கண்டு சகிக்க மாட்டார்கள்.
தாழ்ந்த நிலை வந்தபோதும் நல்ல குணமுடையவர்கள் தங்கள் சுபாவத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
குறிக்கோளை அடைவதற்கு சகிப்புத்தன்மை ஒரு மிக நல்ல சாதனம்.
தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு உலகத்தின் எல்லா செல்வங்களும் கைக்கெட்டிய தூரத்தில் உள்ளன.
ஒருவரின் நற்செயலைக் கண்டு எல்லாவித செல்வங்களும் அவருக்குத் துணையாக நிற்கின்றன.
இதயத்தில் அன்புக்கு இடமிருந்தால் அதில் பிரபஞ்சமே குடியிருக்கும்.
தன்னிடத்தில் அனைத்து உயிர்களையும், அனைத்து உயிர்களிலும் தன்னையும் காண்பவனுக்குப் பொறாமையோ, ஆசையோ, வெறுப்போ ஏற்பட வாய்ப்பே இல்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.