விதுரரின் பொன் மொழிகள்!
By இ . எஸ் . கீதா, சிதம்பரம். | Published On : 25th July 2020 06:00 AM | Last Updated : 25th July 2020 06:00 AM | அ+அ அ- |

மற்றவர்கள் போற்றும்போது மகிழ்ச்சியோ, தூற்றும்போது துக்கமோ அடைய வேண்டாம்.
முடிந்து போன விஷயத்தைப் பற்றி வருத்தம் கொள்ளுதல் வீணாகும்.
முடிவுக்கு வந்த பகையைத் தூண்டி மீண்டும் வளர்ப்பது நல்லதல்ல.
பேச்சை அடக்குவது மிகக் கடினம். அது மிகச் சுருக்கமாகவும், பொருட் செறிவுடன் இருப்பது அவசியம்.
ஆயுதங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும். கொடிய வார்த்தைகளால் ஏற்பட்ட புண் ஆறுவதில்லை.
முதுமையில் மகிழ்ச்சியாக வாழ விரும்புபவன் அதற்குரிய கடமைகளை இளமையிலேயே செய்து முடிக்க வேண்டும்.
அகந்தை, தீய எண்ணங்கள், வீண் பேச்சு, அதிக கோபம், சுயநலம், நம்பிக்கை துரோகம், ஆகிய ஆறும் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G