சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அக்கால அரசர்களுக்கும் தற்கால அமைச்சர்களுக்கும் உள்ள பலம் வாய்ந்த ஆயுதம் ஒன்றின் பெயர் கிடைக்கும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. சட்டென்று கட்டங்கள் நிரப்புங்கள். 
விடையைக் கண்டுகொள்ளுங்கள்.


1.  வெளிநாடு என்பதை இப்படியும் சொல்லலாம்...
2. வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறி, ஓய்வு எடுக்க உதவும் இடம்...
3. நேரம் காலம் அறியாமல் (அறிந்தும்)  உழைப்பவன்...
4. இவன் ஆட வேண்டும் என்றால் நாம் சாட்டையை சுழற்ற வேண்டும்...
5. யானையின் நம்பிக்கைக்குரிய ஆயுதம்...

விடை: 


கட்டங்களில் வரும் 
சொற்கள்
1. அயல்நாடு,  
2. சத்திரம்,  
3. கடிகாரம்,  
4. பம்பரம்,  
5. தும்பிக்கை.


வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும்  சொல்: அதிகாரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com