பொன்மொழிகள் (02/05/2020)

எவனைக்கண்டு உலகம் பிரமிக்கிறதோ அவன் பெரியவன். எவன் தன்னைக் கண்டு பிரமிக்கிறானோ அவன் சிறியவன்.
பொன்மொழிகள் (02/05/2020)

சிறிய விளக்கின் ஒளி பிரகாசிப்பதைப் போல சிறிய நற்செயல்களும் பிரகாசிக்கும்!
 - அரிஸ்டாட்டில்
 எவனைக்கண்டு உலகம் பிரமிக்கிறதோ அவன் பெரியவன். எவன் தன்னைக் கண்டு பிரமிக்கிறானோ அவன் சிறியவன்.
 - கண்ணதாசன்
 பயமும், சந்தோஷமும் ஒரே மனதில் குடியிருக்க முடியாது.
 - ùஸனகோ
 எளிமையானவர்களை பெருந்தன்மையுடனும், மரியாதையுடனும் நடத்துபவனே பெரிய மனிதன்.
 - கார்லைல்
 பிரச்னை என்பது, உங்களைத் திறமையுடன் செயல்பட வைக்க ஏற்படும் சந்தர்ப்பமே!
 - ட்யூக் வெல்லிங்டன்
 இறைவனிடம் பேச விருப்பமா?.... அப்படியானால் அதிகாலையில் எழுந்து விடுங்கள்.
 - கே.ஆர்.போரவல்
 கவலை என்பது இனி நடக்கப்போகும் துக்கத்தைக் குறைப்பது இல்லை. அது இன்றைய சந்தோஷத்தையும் கெடுத்துவிடுகிறது.
 - லியோபஸ் கேக்லியா
 கடன் கொடுக்கும்போது சாட்சி சொல்ல சிலர் இருப்பது நல்லது. தருமம் செய்யும்போதோ அருகில் யாருமே இல்லாமல் இருப்பது நல்லது.
 - ஜான் ரஸ்கின்
 வாக்குறுதியைப் பாராட்டிக் கைகள் தட்டப்படும்போது அதில் எதிர்பார்ப்பின் ஒலியும் கலந்திருக்கும்
 - ஹென்றி ஃபோர்டு
 உலகத்தில் நிறைய சாதனைகள் நிகழ்ந்துள்ளன. அத்தனையும் உற்சாகத்தினால்தான்!
 - எமர்சன்
 தொகுப்பு : அ.ராஜாரஹ்மான், கம்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com