கடி
By DIN | Published On : 21st November 2020 06:00 AM | Last Updated : 21st November 2020 06:00 AM | அ+அ அ- |

""முட்டைகள் விலை சரிவு!''
""நல்ல வேளை, விலை சரிஞ்சிது! முட்டைகள் சரிஞ்சிருந்தால், உடைஞ்சிருக்கும்''
கு.அருணாசலம்,
தென்காசி - 627811.
""உலகம் நம்மை திரும்பி பார்க்கணுன்னா என்ன செய்யணும்?''
""உலகத்துக்கு பின்னாலே போய் நிக்கணும்!''
கு.அருணாசலம்,
தென்காசி.
""விக்கெட் கீப்பருக்கும், கோல் கீப்பருக்கும் என்ன வித்தியாசம்?''
""நீயே சொல்லு...''
""விக்கெட் கீப்பர் "விக்கெட்' விழுந்தா சந்தோஷப்படுவார்!.... கோல் கீப்பர் கோல் விழுந்தா வருத்தப்படுவார்!''
உமர்,
கடையநல்லூர்.
""மழை பெய்யுதுப்பா!''
""அதுக்கென்ன இப்போ?''
""ஆன் லைன் கிளாஸ் வீவு விடுவாங்களாப்பா!''
ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி டவுன்.
""கொரானா ந.ங.ந னா ஓடிடும்!''
""எப்படி?''
“நஞஅட, ஙஅநஓ, நஞஇஐஅக ஈஐநபஅசஇஉ!...’’
ஆர்.எம்.அக்ஷயராம்,
திருநெல்வேலி - 627006
""ஜக்கு எங்கேடா ஓடறான்?"''
""முட்டை வாங்க...''
""இன்னிக்கு பரிட்சை எதுவும் கிடையாதே!''
வி.ரேவதி,
தஞ்சாவூர் - 613007
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...