மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்
By எம் . ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி. | Published On : 03rd October 2020 06:00 AM | Last Updated : 03rd October 2020 06:00 AM | அ+அ அ- |

உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும் அளவைப் பொறுத்துத்தான் உடல் ஆரோக்கியமும் மனவளமும் அதிகரிக்கிறது.
ஆடம்பரமும் சுதந்திரமும் ஒன்றாகாது. நம்முடைய பொருளாதார நிலவரத்திற்கு ஏற்றபடிதான் வாழ்க்கை நடக்க வேண்டும்.
அழகு என்பது ஆடையிலும் ஆபரணங்களிலும் காண முடியாது. பணியாற்றுவதில்தான் உண்மையான அழகு பரிணமிக்கிறது.
இதயம் என்பது அறிவைவிட உயர்ந்தது. இதயத்தைப் பண்படுத்தி வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துங்கள்.
மன உறுதியைப் பொறுத்துத்தான் உடலின் பலம் அமைகிறது.
அன்பு உள்ள இடமே அருமையான பள்ளிக்கூடம்.
தற்பெருமை மறையும்போது ஒழுக்கம் துளிர்விடுகிறது.
செய்த தவறை ஒப்புக்கொள்வதே தன்மானத்தின் சிகரம்.
வரவு செலவு கணக்குகளைச் சரியாக எழுதி வைக்கும் பழக்கத்தை மேற்கொள்வாயாக. சிக்கனம் தானே வந்துவிடும்.
தவறுகள் ஏற்படுவது சகஜம். ஆனால் அதைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது பெரும் தவறு!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G