புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடி

""ரயிலுக்கு ரெண்டு தண்டவாளம் போட்டிருக்காங்களே ஏண்டா?''""இது கூடத் தெரியாதா?.... ஊருக்குப் போறதுக்கு ஒண்ணு!.... ஊரிலேயிருந்து வர்றதுக்கு ஒண்ணு!''

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 12:30 am

DIN


""மகாத்மா காந்தியின் மனைவியின் பெயர்?....''
""ஜெயந்தி!...''
""என்னடா உளர்றே?''
""...."காந்தி ஜெயந்தி' .... ன்னுதானே சொல்றோம்!''

எம் . அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

""அப்ளிகேஷனை டெல்லியிலேதான் ஃபில்லப் பண்ணனுமா சார்?''
""... அப்படியெல்லாம் இல்லையே,.... எதுக்கு அப்படிக் கேக்கறே?'' 
""ஃபில் அப்  இன் கேபிடல்னு எழுதியிருக்கே சார்!''

அமுதா,
திருச்சி.


""நாய்களையே பிடிக்கலே!....''
""ஏன்?''
""அதை முனிசிபாலிடியிலதான் கேக்கணும்!''

மு . பெரியசாமி, 
திருத்துறைப்பூண்டி - 614715

""ரயிலுக்கு ரெண்டு தண்டவாளம் போட்டிருக்காங்களே ஏண்டா?''
""இது கூடத் தெரியாதா?.... ஊருக்குப் போறதுக்கு ஒண்ணு!.... ஊரிலேயிருந்து 
வர்றதுக்கு ஒண்ணு!''

உ . அப்துல் ஹாதி,  
கடையநல்லூர்.


""டேய் ராமு, உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை?""
""அஞ்சு சார்!''
""என்னது?...''
""உ...யி...ர் மூணு எழுத்து,.... மெ...ய் ரெண்டு எழுத்து..... மொத்தம் அஞ்சு!.... சரியா சார்!''

ஆர். சுப்பு,
திருத்தங்கல் - 626130.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.