கடி
""எதுக்கு உன்னை டீச்சர் தோப்புக் கரணம் போடச் சொன்னாங்க?''""வகுப்பறையில் குட்டிக்கரணம் போட்டேன்!''


""எதுக்கு உன்னை டீச்சர் தோப்புக் கரணம் போடச் சொன்னாங்க?''
""வகுப்பறையில் குட்டிக்கரணம் போட்டேன்!''
நா. ஆமினத்து ஜாக்ரினா,
கீழக்கரை- 623517
""சட்னி சூப்பர் டேஸ்ட்!.... யார் அரைச்சது?''
""மிக்ஸிதான்!''
கோ . ராஜசேகர்,
தருமபுரி - 636807.
""அப்பா, பொறக்கப் போற பாப்பாவுக்கு "நல்லகாலம்' னு பேரு வைக்கப் போறீங்களா?''
""ஏன் இப்படிக் கேக்கறே?.... இதெல்லாம் ஒரு பேரா?''
""குடுகுடுப்பைக்காரர் "நல்ல காலம்' பொறக்கப் போகுதுன்னு சொல்லிட்டுப் போனாரே!''
ஜி . யானிலா,
திருவொற்றியூர்.
"பாப்பா அம்மா என்ன பண்றாங்க?''
""பூ வெட்றாங்க!''
""பூ தொடுக்கறாங்கன்னு சொல்லணும்...''
""ம்ஹூம்.... வாழைப்பூ வெட்றாங்க!''
ஆர் . சுந்தரராஜன்,
சிதம்பரம் - 608001
""உனக்கு நேரு மாமாவைத் தெரியுமா?''
""நேருவைத் தெரியும் சார்!.... ஆனா அவரு மாமாவையெல்லாம் தெரியாதே!''
ஆர் . சுப்பு,
திருத்தங்கல் - 626130
""ஒரு கையிலே ஆறு அன்னாசிப் பழமும், இன்னோரு கையிலே ஆறு அன்னசிப் பழமும் இருந்தா எனக்கு என்ன கிடைக்கும்?''
""பெரிய கை தட்டல் கிடைக்கும்!''
உ . அப்துல் ஹாதி,
கடையநல்லூர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...