நினைவுச் சுடர்!: பாரத மண்ணில் புரண்ட பாரதி!

"பாரதி பிறந்தார்' என்ற நூலில் எழுத்தாளர் கல்கி எழுதிய கட்டுரையில், பாரதியாரின் வாழ்க்கையில் நடந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள ஒரு சுவையான நிகழ்ச்சி இது.
நினைவுச் சுடர்!: பாரத மண்ணில் புரண்ட பாரதி!

"பாரதி பிறந்தார்' என்ற நூலில் எழுத்தாளர் கல்கி எழுதிய கட்டுரையில், பாரதியாரின் வாழ்க்கையில் நடந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள ஒரு சுவையான நிகழ்ச்சி இது.

""பாரதியார் சில காலம் கடையம் என்னும் கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது ஒரு தடவை எங்கேயோ போவதற்காக ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ரயில் ஏறினார். பெரும்பாலும் மெய்ம்மறந்து பரவச நிலையில் உள்ளவராதலால், ரயில் ஏறும்போது காலைப் படியில் வைப்பதற்குப் பதிலாகப் பக்கத்தில் வைத்துவிட்டார். 

"தடால்' என்று பிளாட்பாரத்தில் விழுந்தார்! அருகில் இருந்தவர்கள் எல்லோரும் "ஐயோ! பாரதியார் விழுந்துவிட்டாரே!' என்று அலறிப் புடைத்துக்கொண்டு அவரைத் தூக்க வந்தார்கள். "தூக்காதே! கிட்டே வராதே!' என்று ஆவேசம் வந்தவரைப் போல் கூவினார் பாரதியார். 

"இது என்ன வம்பு!' என்று மற்றவர்கள் திகைத்து நிற்க, பாரதியார், மீண்டும் "ஆஹா! இந்தப் புண்ணிய பூமியிலே படுப்பதற்கு, இந்தப் பாரத நாட்டின் புழுதியிலே புரள்வதற்குக் கொடுத்து வைக்க வேண்டாமா? எத்தனை பெரியோர்கள், எத்தனை மகான்கள், எவ்வளவு கற்புக்கரசிகள், எவ்வளவு மகாகவிகள், கலைஞர்கள், அவதார புருஷர்கள் வாழ்ந்த தேசம் இது? இப்பேர்ப்பட்ட தாய்நாட்டின் மண்ணில் இன்னும் கொஞ்சம் புரண்டுவிட்டு வருகிறேன். எல்லாரும் எட்ட நில்லுங்கள்!' என்று சொல்லிவிட்டு, அனைவரும் பார்த்திருக்க, அந்த ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உண்மையிலேயே 
புரண்டாராம். 

ரயில் டிரைவரும் கார்டும்கூடப் பிரமித்துப் போய் நின்று, பாரதியார் எழுந்து வந்து ரயில் ஏறிய பிறகுதான் ரயிலை விட்டார்களாம்' (கல்கி,  நூல்: பாரதி பிறந்தார்). 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com