விடுகதைகள்

இந்த அழகிய சேலையை மடிக்க முடியாது, சிதறிக் கிடக்கும் வெள்ளிக் காசுகளை எண்ணவும் முடியாது.


1.  இந்த அழகிய சேலையை மடிக்க முடியாது, சிதறிக் கிடக்கும் வெள்ளிக் காசுகளை எண்ணவும் முடியாது.
2. குண்டு குண்டு சட்டிக்குள் கறுப்புக் குதிரை சுற்றிச் 
சுற்றி ஓடுதாம்.
3. ஊசி போட வீட்டுக்கு வந்தாரு டாக்டரு, ஊசியைப் போட்டுவிட்டுக் காசு வாங்காமப் போனாரு.
4. அழகிய குகைக்குள் 32 வீரர்கள், அவர்கள் நடுவிலே ஒரு நாகம்.
5.  கிழித்த கோட்டுக்குள் விலகாமல் ஓடுகிறான் கறுப்பன்.
6. இங்கே ஒட்டுகிறார்கள், அங்கே வெட்டுகிறார்கள்.
7. ஒற்றைப் பெண்ணுக்கு ஓராயிரம் சேலை.
8. ஒன்பதோ பத்தோ அத்தனை பிள்ளைகளுக்கும் ஒரே குடுமி.


விடைகள்

1.  வானம், நட்சத்திரங்கள்    
2. ஆட்டுக்கல்
3. கொசு  
4. வாய், பற்கள், நாக்கு
5.  ரயில்  
6.  தபால் கடிதம்
7.  வெங்காயம்    
8.  வெள்ளைப்பூண்டு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com