பொன்மொழிகள்

பொன்மொழிகள்

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக்கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு ஒப்பாவான்.


பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக்கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு ஒப்பாவான்.   
-   விவேகானந்தர்

 உதடுகளை மூடு! இதயத்தைத் திற!  
-  விவேகானந்தர்

நாம் உலகிற்கு வந்ததே சேவை செய்வதற்காகத்தான். பிறரை அடக்கி ஆள்வதற்கு அன்று! 
-  நோவாலின் 

எல்லோரையும் நம்புவது ஆபத்துதான். ஆனால் யாரையுமே நம்பாலிருப்பது பேராபத்து! 
- ஆபிரஹாம் லிங்கன்

நாம் திரட்டும் பொருள் மற்றவர்களுக்கு எந்த அளவு உதவுகிறதோ அந்த அளவிற்கே நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருக்கும்.  
-  தாகூர்

நோயைத் தொடக்கத்திலேயே குணப்படுத்துங்கள். கடனை சிறியதாக இருக்கும்போதே செலுத்திவிடுங்கள். 
- கதே

குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை வரவேற்கக் கற்றுக்கொள். எந்த அளவு இதைச் செய்கிறாயோ அந்த அளவு வேகமாக முன்னேறுவாய். 
 -  அரவிந்தர்

நீங்கள் அமைதியாக இருந்தால்தான் மற்றவர்களுக்கும் அமைதி கிடைக்கும்படி உங்களால் செயல்பட முடியும்.  
-  தாமஸ்

ஆரோக்கியம்தான் செல்வம்! அதற்கு வரி ஏதும் கொடுக்க வேண்டியதில்லை!  
-  ஆர்னால்ட் கிளாúஸாவ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com