சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் பத்திரம் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...


1. இவர்கள் ஐந்து பேர்...
2. மதுரை என்று முடியும் ஊர்...
3. மழை வர வேண்டுமென்றால் இது வரணும்...
4. ஆண்டின் இரண்டாவது மாதம்...
5. செக்கிலிருந்து கிடைக்கும், எண்ணெய் அல்ல...

விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1. பாண்டவர்,  
2. மானாமதுரை,  
3. கார்மேகம்,  
4. பிப்ரவரி,  
5. புண்ணாக்கு.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : பாதுகாப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com