பொன்மொழிகள்

அன்பு என்னும் எழுத்தைப் படித்தவனே சிறந்த பண்டிதன்! 
பொன்மொழிகள்


அன்பு என்னும் எழுத்தைப் படித்தவனே சிறந்த பண்டிதன்! 
- கபீர்

மூர்க்கனுடன் சேர்ந்து சிரிப்பதைவிட, விவேகமுள்ளவனுடன் கண்ணீர் விடுவது மேல். 
- விக்டர் ஹ்யூகோ

வாழ்வு என்னும் துணியில் நன்மை, தீமை என்ற இருவகை நூல்கள் இருக்கும் !
- ஷேக்ஸ்பியர்

தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு, வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுகளைவிட உயர்ந்தவை! 
- லெனின்

அன்பு செலுத்தும் மனிதர்களுக்கு பொருள் ஒரு பொருட்டல்ல. 
- மு.வரதராசனார்

சோம்பலை உதறிவிட்டு, சுறுசுறுப்போடு இயங்கும் மனிதன் ஒளி வீசுகிறான். 
- பெய்லி

கல்வியின் நோக்கம் நன்னெறியைப் பரப்புவதே. 
- விவேகானந்தர்

பொறுமையும் சிறந்த பிரார்த்தனையே 
- புத்தர்

சமயத்தில் உதவும் கைகள் புனிதமானவை 
- இங்கர்சால்

தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும். 
- ஸ்ரீஅன்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com