மரங்களின் வரங்கள்!: புற்று நோய் கொல்லி - அன்னமுன்னா மரம்

நான்தான் அன்னமுன்னா பழம்  பேசுகிறேன்.   எனது தாவரவியல் பெயர் அன்னோனா மரிக்கடா என்பதாகும்.
மரங்களின் வரங்கள்!: புற்று நோய் கொல்லி - அன்னமுன்னா மரம்
Updated on
2 min read


நான்தான் அன்னமுன்னா பழம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் அன்னோனா மரிக்கடா என்பதாகும். நான் அன்னான்னசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு காடு ஆத்தா பழ மரம், அண்ணவண்ணா பழ மரம், முள் சீத்தா பழ மரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நான் அமெரிக்காவின் அமேசான் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமா காணப்படறேன். குறிப்பா, இலங்கை, வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்ச்சுகல், மலேசியா, இந்தோனேஷியா முதலிய நாடுகளில் நான் மிகவும் பிரபலம். என் மரத்தின் பழங்கள் மட்டுமல்லாது, இலைகள், வேர்கள், மரப்பட்டைகள், தண்டுகள், பூ, விதைகள் அனைத்தும் மருத்துவ குணங்கள் மிக்கவை.

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கெடாமல் நான் பாதுகாப்பேன். அதனால், எந்தக் கொடிய நோயையும் எதிர்த்து போராடி உங்களைக் காக்கும் சக்தி எங்கிட்ட நிறைவே இருக்கு. என் பழத்தில் வைட்டமின் ஏ, பி காம்ப்பெளக்ஸ், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, புரோட்டின், நார்ச்சத்து நிறைஞ்சிருக்கு.

குழந்தைகளே, புற்று நோயைத் தடுக்கும் அதிஅற்புத ஆற்றல் என்னிடம் மிக அதிகமாகவே இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் வேதியியல் மருந்துகளை விட பன் மடங்கு வலுவான எதிர்ப்புச் சக்தி கொண்ட ஒரு அதிஅற்புதமான இயற்கைப் புற்று நோய் கொல்லியாக என் பழம் உள்ளது என்பது உங்களுக்குப் புதிய செய்தி தானே. புற்று நோய் உள்ளவர்கள் என் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிர்க் கொல்லி நோயான அந்நோய் விட்டால் போதும் என்று ஓடி விடுமாம். நம்புங்க, இது இறைவன் உங்களுக்குத் தந்த வரமில்லையா குழந்தைகளே.

வயிறு, மார்பு, நுரையீரல், கணையம், மலக்குடல் ஆகிய பல இடங்களில் ஏற்படும் புற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் என்னிடம் இருக்கு, கடுமையான குமட்டல், வாந்தி, திடீரென எடை குறைதல், முடி உதிர்தல் முதலிய பிரச்னைகள் உங்களுக்கு இருக்கா, கவலைப்படாதீங்க. எங்கிட்ட வாங்க. என் பழம் இயற்கையான உணவாக இருப்பதால் ரசாயன சிகிச்சையான கீமோதெரப்பி இல்லாமல், பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் பாதுகாப்பான மருந்தா, புற்றுநோய் செல்களைத் திறம்படத் தாக்கி அவற்றை முற்றிலும் அழிக்கும் சக்தி என் பழத்தில் இருக்கு. அதனால், உடலில் பலவீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் நீங்க இருப்பீங்க. உங்க உடம்பின் ஆற்றலை வளர்க்கும், கண் பார்வையை சீராக்கி, தைராய்டு பிரச்னையையும் குணமாக்கும். பூஞ்சைத் தொற்று எனப்படும் பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் என் பழம் குணமாக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தையும், மன அழுத்தம், நரம்பு கோளாறுகள், அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் சக்தி, இதய நோய், ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருந்து என் பழத்தில் இருக்கு.

என் இலைகளையும், விதைகளையும் பல்வேறு மருத்துவ பயன்களுக்காக பயன்படுத்தறாங்க. காலை நேரங்களில் பூக்கும் என் பூ மஞ்சள் நிறத்திலிருக்கும், வாசனை அமோகம். உங்களுக்கு காய்ச்சல் வந்தால், தூங்கச் செல்லும் முன் படுக்கைக்கு கீழ் என் இலைகளை வைத்து அதன் மீது மெல்லிய பருத்தித் துணியை விரித்துப் படுத்தால் காய்ச்சலின் தீவிரம் குறைந்து விடும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் என் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயமாக தொடர்ந்து அருந்தினால் அமைதியான தூக்கம் உங்களுக்கு நிச்சயம். அது மட்டுமல்ல உங்கள் வயிறு உபாதைகளும் நீங்கிடும்.

கடந்த ஆறு ஆண்டுகளில், நம் நாட்டில் மரங்கள் உள்ள நிலப்பரப்பு, நாடு முழுவதும் 15 ஆயிரம் சதுர கி.மீ. அதிகரித்திருக்கிறதாமே, மகிழ்ச்சி குழந்தைகளா. நன்றி, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com