பொன்மொழிகள்

எப்போதும் சந்தோஷமாக வாழ முயற்சி செய்பவனுக்கு நிம்மதி போகலாம். எப்போதும் நிம்மதியாக வாழ முயற்சி செய்பவனுக்கு சந்தோஷம் வந்தே தீரும். 
பொன்மொழிகள்
Published on
Updated on
1 min read


எப்போதும் சந்தோஷமாக வாழ முயற்சி செய்பவனுக்கு நிம்மதி போகலாம். எப்போதும் நிம்மதியாக வாழ முயற்சி செய்பவனுக்கு சந்தோஷம் வந்தே தீரும். 
- விவேகானந்தர்

கவலைகள் பறவைகள். அவை உங்கள் தலைக்கு மேலே பறப்பதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால் உங்கள் தலையின் மேல் அவை கூடு கட்டவிடாமல் தடுக்க முடியும். 
- சீனப் பழமொழி

சுறுசுறுப்பாய் இருந்துவிட்டால் போதாது. சுறுசுறுப்பாய் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். 
- ஹென்றி டேவிட்

எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிவாய். அந்த அறிவால் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடிப்பாய். அதுவே புத்திசாலித்தனம். 
- பால் கோல்ட்வின்

சான்றோருக்கு அளிக்கும் கெளரவம் கடவுளுக்குச் செய்யும் மரியாதை ஆகும். 
-யாரோ.

உழைப்பு வறுமையையும், தீமையையும் விரட்டுகிறது. 
- டால்ஸ்டாய்

நடந்தால் நாடெல்லாம் உறவு. படுத்தால் பாயும் பகை.
- கிளார்க்

உதவி செய்ய வாய்ப்பிருந்தும் மறுப்பவர்கள் குறை கூறத் தகுதியற்றவர்கள். 
- ஆபிரஹாம் லிங்கன்

தகுதியிருந்து ஒன்றை அடையாமலிருப்பது, தகுதியின்றி அதை அடைவதைவிட மேலானது. 
- இங்கர்சால்

கடினமான உழைப்பு என்பது தெய்வ வழிபாட்டுக்குச் சமம். 
- லால் பகதூர் சாஸ்திரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com