கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

நிறங்களுக்குள் யார் உயர்ந்தவர்கள் என்று சர்ச்சை எழுந்தது. முதலில் நீலம் எழுந்து, ""உலகிலுள்ள கடலின் நிறம், பறந்து விரிந்த ஆகாயத்தின் நிறம் அனைத்தும் நீலமே!.... நானே உயர்ந்தவன்!''
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!


நிறங்களுக்குள் யார் உயர்ந்தவர்கள் என்று சர்ச்சை எழுந்தது. முதலில் நீலம் எழுந்து, ""உலகிலுள்ள கடலின் நிறம், பறந்து விரிந்த ஆகாயத்தின் நிறம் அனைத்தும் நீலமே!.... நானே உயர்ந்தவன்!''
உடனே சிவப்பு, ""அனைத்து உயிரினங்களின் உடலிலும் ஓடும் ரத்தம் என்னுடைய நிறம்!....அபாய எச்சரிக்கைகளைக் கொடுத்து உயிர்களைக் காப்பேன் நான்..... எனவே நானே உயர்ந்தவன்!''
""இதென்ன பேச்சு!... பயிர்களின் நிறம் பச்சை! தாவரங்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை ஏது?.... பச்சை விளக்கும், கொடியும் இயங்கினால்தான் உலகமே இயங்கும். சந்தேகமின்றி நானே உங்க எல்லாரையும்விட பெரியவன்!"" என்றது பச்சை.
சண்டை பெரியதாகவே, நிறங்கள் இறைவனை வேண்டின. அப்போது வானில் மின்னலுடன் இடி முழங்கியது! பயந்துபோன நிறங்கள் அனைத்தும் ஒன்று கூடின. அழகான வானவில் தோன்றிது.
இறைவன் அவற்றின் முன் தோன்றி, சண்டை போடுவதில் என்ன பெருமை இருக்கிறது! இப்படி ஒருவரோடு ஒருவர் இணைந்திருப்பதில் எத்தனை அழகு பாருங்கள்! கூடி வாழுங்கள்! அதில் கோடி நன்மைகளுண்டு'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com