எங்கள் காந்தி!

எங்கள் காந்தி இனியவர்பண் புகள் பலவும் நிறைந்தவர்அமைதி வழியில் நடந்தவர்
எங்கள் காந்தி!
Updated on
1 min read

எங்கள் காந்தி இனியவர்
பண் புகள் பலவும் நிறைந்தவர்
அமைதி வழியில் நடந்தவர்
அன்பை சொல்லித் தந்தவர்!

அகிம்சை ஆயுதம் தாங்கி - நம் 
அடிமை விலங்கை உடைத்தவர்!
எல் லோரும் இங்கு சமமென 
எட்டுத் திக்கும் உரைத்தவர்!

மதுவைத் தீண்டாதிருந்தவர்!
மாமிசம் அறவே மறுத்தவர்!
மனித நேயம் கொண்டவர்!
மதநல் லிணக்கம் கண்டவர்!

சாதிபேதங்கள் மறுப்பவர்!
சமத்துவப் பாதை வகுத்தவர்!
என்றும் நமது நெஞ்சினில் 
நீங்கா இடத்தைப் பிடித்தவர்!

அறவழி அவரது கொள்கையாம்
அதை நாம் பின்பற்றுவோம்!
தேசத்தந்தை காந்திதான் 
என்றும் அவர் புகழ் வாழ்கவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com