கடவுள் கணக்கு!

வாசனும், நேசனும் ஒரு கோவில் மண்டப வாசலில் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு! அப்போது அங்கு சுகதேவர் என்பவர் வந்து சேர்ந்தார்.
கடவுள் கணக்கு!
Published on
Updated on
2 min read

வாசனும், நேசனும் ஒரு கோவில் மண்டப வாசலில் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு! அப்போது அங்கு சுகதேவர் என்பவர் வந்து சேர்ந்தார்.
வந்தவர், "" நானும் இரவு இங்கே தங்கலாமா?'' என்று கேட்டார்.
""அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள்.'' என்றனர் இருவரும்.
சிறிது நேரம் கழித்து, "" எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?'' என்று கேட்டார் சுகதேவர்.
வாசன், ""என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது'' என்றார்.
""என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது!... ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் ,இதனை நாம்
எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்வது?'' என்றார் நேசன்.
""இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்....நீங்கள் உங்கள் ரொட்டி ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்போது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம்!'' என்றார் என்றார் சுகதேவர்.
""இது சரியான யோசனை!'' என்று அப்படியே செய்தனர்.
ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.
பொழுது விடிந்தது. மழையும் நின்றது. சுகதேவர், "" உங்கள் உதவிக்கு மிக்க நன்றி!'' என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து, "" நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள்!'' என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.
மூன்று ரொட்டிகளை கொடுத்த நேசன், ""அந்தக் காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்கு காசுகள் எடுத்துக்கொள்ளலாம்'' என்றார்.
வாசன் இதற்கு சம்மதிக்கவில்லை. ""மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்!.... நான் ஐந்து ரொட்டிகள் கொடுத்தேன்.... எனக்கு ஐந்து காசுகள்!'' என்று வாதிட்டார்.
நேசனோ, ""மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை. சமமாகவே பங்கிடுவோம்!'' என்றார்.
சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்.
மூன்று ரொட்டிகளை கொடுத்த நேசனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்த வாசனுக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.
நேசன், ""மன்னா! இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் தரச் சம்மதித்தார். '' என்றார்.
அரசர், "" நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது. ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம்!'' என்றார்.
(ஆம் அதுதான் கடவுளின் கணக்கு!.... எந்த அளவு தருமம் செய்தோமோ அதற்கான பலன் மட்டுமே நமக்குச் சேரும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com