புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடி

""என் பையன் ஃபர்ஸ்ட் க்ளாஸ்லே பாஸ் பண்ணிட்டான்!''""வெரிகுட்!.... மேலே என்ன பண்ணப்போறான்?''""செகண்ட் க்ளாஸ்தான்!''

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 12:30 am

DIN

""என் பையன் ஃபர்ஸ்ட் க்ளாஸ்லே பாஸ் பண்ணிட்டான்!''
""வெரிகுட்!.... மேலே என்ன பண்ணப்போறான்?''
""செகண்ட் க்ளாஸ்தான்!''

கே . முத்தூஸ்,
தொண்டி..

(உலக உருண்டையில்  இந்திய தேசத்தில் இரண்டு எறும்புகள்)
""நான் ஆஸ்திரேலியாவிலேயிருந்து வரேன்.... நீ?''
""அமெரிக்காவிலேயிருந்து வரேன்!''

உமர்,
கடையநல்லூர்.

""இதை அலமாரியின் மேல் தட்டிலே வெக்கச் சொன்னாங்க.... ஸ்டூலைக் காணோம்...."லோ...லோ' ன்னு அலையறேன்!''
""...ஹை....ஹை...ன்னு அலை.... கிடைச்சுடும்!''

கோ . வினோத்,
திருநெல்வேலி - 627011.


""இமயமலை எங்கே இருக்கு?''
""அட்லாஸ்லே 10 ஆம் பக்கத்திலே இருக்கு சார்!''

குலசை நஜிமுதீன்,
காயல்பட்டினம்.

""நீ ஆஃப் பாயில் சாப்பிடற அழகைப் பார்த்தா எனக்கு ஒரு கவிதை தோணுது!''
""என்ன...சொல்லு!''
""ஒரு அரை வேக்காடே இன்னொரு அரைவேக்காட்டை சாப்பிடுகிறதே!...''

ஆர் . சுந்தரராஜன்,
சிதம்பரம் - 608001.

""நல்லாப் படிப்பான்னு சொன்னீங்க.... ஆனா கம்மியா மார்க் வாங்கியிருக்கானே?''
""படிப்பான்!.... ஆனா சரியா எழுதமாட்டான்!''

ஏ . மூர்த்தி,
புல்லரம்பாக்கம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.